பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற் கூட்டம் 67 கழைக்கண் இரும்பொறை ஏறிவிசைத் தெழுந்து குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்.அக் குன்றகத் ததுவே, குழுமிளைச் சிறுTர்; கொடிச்சி கையகத் ததுவே, பிறர் விடுத்தற் காகாது பிணித்தஎன் நெஞ்சே!” (கழை-குழல் வாத்தியம்; இரங்க-ஒலிக்க, பல்லியம்பலவகை வாத்தியங்கள்; கறங்க-முழங்க, கொடும்புரி. முறுக்குண்ட புரி: அதவத் திங்கனி-அத்திப்பழம்; துய்த்தலை-பஞ்சு போன்ற தலை (துய்-பஞ்சு); வன்பறழ்-வலிய குட்டி, குறக்குறு மாக்கள்-குறவரின் சிறுவர்கள்; மிளை-காவற்காடு; நாறு மயிர்-நறுமணங் கமழும் கூந்தல்; கொடிச்சி-மலைநாட்டுப் பெண்; பிணித்த-பிணிைப்புண்டl - தன்னுடைய நெஞ்சு பிறரால் விடுவிக்க முடியாதபடி மலை நாட்டு நங்கை ஒருத்தியின் கையில் சிக்கிக் கொண்டதாகக் கூறு கின்றான் தலைவன். அவள் அருள் செய்து விடுவித்தாலன்றி பாங்கன் போன்றார் விடுவித்தற் கரிதென்பது குறிப்பு, பாடலின் முதல் ஏழு அடிகள் மலை நாட்டுச் சூழ்நிலையை அழகாக எடுத் துரைக்கின்றன. கூத்தி நடந்த கயிற்றின்மேல் மந்தியின் பறழ் ஏறியாடக் கண்ட குறமாக்கள் தாளங் கொட்டா நிற்கும் என்பது. இறைச்சிப் பொருள். இது காப்பன காத்துக் கடிவன கடிந்து மன் பதை ஒம்புதலை மேற்கொண்ட என்னுள்ளத்து ஒரு கொடிச்சி சென்று தங்குவதனை யறிந்த நீ கைகொட்டி நகையாடி அழுங்கச் செய்தனை” என்ற பொருள் தோன்ற நிற்பது கண்டு மகிழத் தககது. இதே நிலையைக் குறுந்தொகைத் தலைவன் ஒருவன் இவ் வாறு கூறுவான்; மால்வரை யிழிதருந் துTவெள் ளருவி கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னன் உரன்அவித் தன்றே. * 2. நற்-95, 3. குறுந்-95.