பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அகத்திணைக் கொள்கைகள் நயனும் நண்பும் நாணும்.நன்கு உடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் நும்மினும் உடையேன் மன்னே கம்மென எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை விதிர்த்துவிட் டன்ன அம்நுண் சுணங்கின் ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன் திருநுதல் பொலிந்த தேம்பாய் ஒதி முதுநீர் இலஞ்சி பூத்த குவளை எதிர்மலர்ப் பிணையல் அன்னவிவள் அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே." (நயன்-கலந்து பழகும் தன்மை; நண்பு-நட்பு: நானும்நாணமும்; கொடை-ஈகை, பண்பு-தீச்செயலில் செல் லாத உள்ளம்; பாடு-உலக நெறி; கம்மென-மேன்மேலும்: தித்தி-வயிற்றில் தோன்றும் தேமல்; விதிர்த்து விட்டன்னஅள்ளித் தெளித்தாற் போன்ற, சுணங்கு - கொங்கை யின்மீது தொன்றும் தேமல், இலஞ்சி-பொய்கை, கானா ஊங்கே-காண்பதற்கு முன்னர்) "இவை யெல்லாம் உன்னைவிட எனக்கு நன்கு தெரியும். அவள் குவளைக் கண்ணைப் பார்ப்பதற்குமுன் பேசவேண்டிய பேச்சுகள்' என்று எதிர் உரைக்கின்றான். அறிவு நிலையில் நின்று பேசும் இளந்தோழன், 'மலையுறை குறவன் காதல் மடமகள் பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் சொல்லெதிர் கொள்ளாள் இளையள் அனையோள் உள்ளல் கூடாது' |அருங்குரையல்-அரியள் அருங்கடிக் காப்பினள்-அரிய காவலையுடையள் சொல்லெதிர் கொள்ளாள்.நீ கூறிய மொழிகளை ஏற்காள்; உள்ளல்-நினைத்தல்) என்று மேன்மேலும் தடுத்துக் கூறுகின்றான். அதற்குத் தலைவன், 'நண்பனே, காற்று மோதியடித்தாலும் வலிய மழை வீசினாலும் இனங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும் வேறு பல ஊறுகள் தோன்றினாலும் தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினை நற்-150 9. நற்-201