பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற் கூட்டம் 71 யுடைய மலைச் சாரலில் திகழும் பாவை போல் இக்குறமகள் என் நெஞ்சினை விட்டு அசல்கின்றனளல்லள். ஆதலின் இவளை எவ் வாறு மறந்துய்வேன்?" என்கின்றான். இடித்துரைக்கும் பாங்கனை நோக்கிக் குறுந்தொகைத் தலைவன் கூறும் மறுமொழி நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. இவன் காமக் கிறுக்கனாய்க் காதற்பித்தனாய்க் கைகடந்து பேசுகின்றான். கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சில் ஒதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் ஒருநாட் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே." (கேளிர்-நண்பர்; நாளும்-எப்பொழு தும்; நெஞ்சு பிணி கொண்ட நெஞ்சினைப் பிணித்துக் கொண்ட, ஒதிகூந்தல்; ஆகம்-மேனி! . :இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று பக்தன் கருதுவான். போர்க்களம் புக்குப் புண்படாத நாளெல் லாம் புறங்கொடுத்த நாளாகக் கருதுவது மறவன் இயல்பு: இக் குறுந்தொகைத் தலைவன் தன் அகம் புகுந்தவளின் மெல்லிய ஆகத்தை மேவாத நாளெல்லாம் வாழாத நாளாகக் கருது கின்றான். இதுவரை வாழ்ந்ததை இவன் வாழ்க்கையாக மதிக்கவில்லை. இனியும் இங்ஙனம் கொன்னே செல்வதை இவன் விரும்பவில்லை. நினையத் தக்க செயல் சிறப்புடைய ஒரு நாளா வது வேண்டும் என்றும், அந்நாள் தன் உள்ளம் கவர்ந்த கள்வியின் மேனியைத் தழுவும் நாளே என்றும், அதன்பின் வீண் வாழ்க்கை சிறிதும் வேண்டாம் என்றும் ஆராக் காதலால் தன் தோழன் அதிர்ந்து போகும் குறிக்கோளை எடுத்தியம்புகின்றான். உண்மை நட்பு மறுப்பறியாத நட்பு: காமத்துக்கும் கண்ணில்ைைல. காதல் நோய் பற்றியவருக்கு உறக்கமும் வராது. இரவினானும் இன்றுயில் அறியாது, அரவுறு துயரம் எய்துப' - தலைவனது உரையைக் கேட்டு அவன் இயல்பை நன்கு அறிந்த பாங்கன், நம் அன்பனுக்குக் கவர்ச்சி பெரிதாயிற்று. இனி யானும் இவனுடன் கூட வருந்தினால் இவனை ஆற்றுவிப்பார் இலராம் என்று ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு 10. குறுந்-280; பாடல் 132யும் காண்க. 11. ஐங்குறு-173