பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穿蒸葛 பச்சைப் பசுங்கொண்ட்லாகிய ஏழுமலையான் எழுந்தருளி யிருக்கும் திருத்தலத்தில், அவன் திருவடிவாரத்தில் நிறுவப் பெற்றுள்ள பல்கலைக் கழகத்தில் அவனருளால் பணியாற்றிய போது அவனருளாலேயே தமிழ்த் துறையை நிறுவும் பேறும், அத் துறையின் தலைமையை ஏற்று அதனைச் செவ்வனே நடாத்தும் பேறும் பெற்றபோது தமிழ் எம். ஏ. பயிலும் மாணாக்கர்கட்கு அகவிலக்கியம் கற்பிக்கும் பொறுப்பினை யானே வலிந்து மேற் கொண்டேன்; கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் இ ப் ப ரிை தொடர்ந்து நடைபெற்றது. வாரந்தோறும் நடைபெற்ற கருத் தரங்குகளில் இந்த இலக்கியத்தின் கிட்டதட்ட எல்லாப்பகுதி களும் மாணாக்கர்கள் ஆசிரியர்கள் இவர்களுடன் கலந்து ஆயப் பெற்றன; ஆய்வில் சூடும் பிறந்தது; ஒளியும் தோன்றியது. ஒரளவு தெளிவும் ஏற்பட்டது. இந்த முயற்சியின் விளைவாக எழுந்ததே அகத்திணைக் கொள்கைகள் என்ற இந்நூல். இந்த நூலின் விரிவான உள்ளுறை ஆய்வின் போக்கினை ஒருவாறு தெளிவுறுத்தும். இந்த நூலைச் சிறிது கோவைச் சாயலோடு அமைத்துள்ளேன். புதிதாக அகத்திணை உலகில் புகுவோருக்கு ஓரளவு இவ்வமைப்பு துணை செய்யக்கூடும் என்றும், அகத்திணைக் கூறுகளை அடிப் 4டையுடன் அறிந்து கொள்வதற்குத் துணையாகவும் இருக்கலாம் என்றும் கருதியே இவ்வமைப்பினை மேற்கொண்டேன். அகத் திணையை ஆழ்ந்து கற்போருக்கும் ஆராய்வோருக்கும் பல புதிய தடங்களையும் அமைத்துள்ளேன். நூலில் நுழைந்து செல்வோர்' இவற்றை நன்கு அறியலாம். பல்வேறு இலக்கியங்களிலிருந்தும் தரப்பெற்றுள்ள காட்டுகள் அவ்வவ் இலக்கியங்களைப் பயில வேண்டும் என்ற காதலையும் களவியல் போக்கில் எழுப்பும்: உடனே அவற்றுடன் கற்பியல் போக்கில் ஊடாடவும் வழியமைக் கும். படிப்போரிடம் எனது இந்நோக்கங்கள் செயற்படுமாயின் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற குறிக்கோள் நிறைவேறும் என்பது என் அதிராத நம்பிக்கை. - இந்நூலை விரைந்து அழகுற அச்சிட்டு உதவிய நாவல் ஆர்ட் பிரிண்டர்சின் அதிபர் கவிஞர் நாசா. நாச்சியப்பன் அவர்கட்கும். மேலுறையைக் கண்கவர் வனப்புடன் அச்சிட்டுக் கட்டமைத்துத் தந்தி'கந்தன் அடிமை எஸ். பி. சண்முகம்பின்ளை அவர்கட்கும்