பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 - அகத்தினைக் கொள்கைகள் தலைவன் கூறிய குறியிடம் செல்லுகின்றான். அங்ஙனம் ೧೯೬೧/7, முன்போல ஆயவெள்ளம் விளையாட்டு விருப்பால் பிரியத் தனியளாகி நிற்கும் தலைவியைத் தன்னை அவள் காணாமல், தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் மறைந்து நின்று அவளைக் காண்கின்றான். உடனே, இக் சோலையே எம் பெருமானால் காணப்பட்ட இடம் ஈண்டு நிற்கும் இந்நங்கையே எம் இறைவனை வருத்தியவள் என்று துணிகின்றான். மேலும். இத்தகைய பேரெழிலுடையாளைக் கண்டு, பிரிந்து, இங்குநின்று, அங்குவந்து யான் கழறவும் ஆற்றி, அத்தனையும் தப்பாமல் சொன்ன அண்ணலே திண்ணியான் என்று தலைவனை வியந்து நிற்கின்றான். மீண்டும் தலைவனிடம் விரைந்து சென்று நிலைமையை உணர்த்துகின்றான். தலை வனும் அந்த இடம் சென்று தனியளாய் நிற்கும் தலைவியை எதிர்ப்பட்டுக் கலந்து மகிழ்கின்றான். இங்ஙனம் பாங்கனால் தலைவனுக்குத் தலைவியுடன் ஒரு கூட்டம் நிகழ்கின்றது. இதுவே பாங்கற் கூட்டம் என்று பெயர் பெறுகின்றது, இங்ஙனம் மகிழ்ந்து தலைவியைப் பிரிவாற்றுவித்து நீங்குங் கால், இனி நீ வருங்கால் நின் காதல் தோழியோடும் வருக! என்று அவளுக்கு உணர்த்தி, அவளை முன் போல ஆய வெள்ளத்தை அடையச் செய்து பிரிவான். ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன், & 。 'எமக்குநயந் தருளினை யாயிற் பனைத்தோள் தன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியே மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே' (பணை-மூங்கில் நுதல் - நெற்றி, அரிவை - பெண் (தோழி); இயலி - நடந்து வந்திசின் - வந்தருள் வாயாக! கூறுவதனால் இஃது அறியப்பெறும். பாங்கற் கூட்டம்பற்றிச் சங்க இலக்கியத்தில் 27 பாடல்கள் உள்ளன. இவற்றுள் பாங்கன் கூற்றாய் வருவன இரண்டே." எஞ்சிய இருபத்தைந்தும் தலைவன் கூற்றாகவே வருவன. பாங்கனுடைய தொடர்பால் அகத்தலைவனின் காமச் சுரம் Tagp-175 13. குறுந்-78, 204.