பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கற் கூட்டம் 73 தணிகின்றது; அறிவு திரியாதிருத்தற்குந் துணையாகின்றது. அவனிடம் தன் தலைவியைப்பற்றி மீனம் விட்டுப் பேசுந்தோறும் தலைவனின் மனம் வேகம் தணியவும் அவனும் தன் சுய அறிவு நிலைக்கு வரவும் காண்கின்றோம். தலைவன் கூற்றாக 25 பாடல்கள் இருப்பதற்கு இந்த உளவியலே காரணமாகும் என நினைக்கத் தோன்றுகின்றது. - - இங்கே கூறப்பெற்ற பாங்கற் கூட்டம், இதற்கு முன்னர்க் கண்ட இடந்தலைப்பாடு இந்த இரண்டினலும் நாம் அறிய வேண்டியதொன்று உண்டு. இடந்தலைப்பாடு என்பது, பாங்கற் கூட்டத்தின்கண் அடங்கியதொரு பகுதியாய் நிகழ்தலால், பாங்கற் கூட்டத்தைக் கூறவே இடந்தலைப்பாடும் நன்கு தெளி வாகிவிடும். இக்காரணத்தால்தான் இறையனார் அகப் பொருள், திருச்சிற்றம்பலக் கோவையார் முதலான அகப்பொருள் நூல் களில் பாங்கற் கூட்டமே விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. இங்குப் பாங்கன் என்பவன் பார்ப்பனனாவான். நச்சினார்க்சினியரும், ‘இவன் பெரும் பான்மை பார்ப்பானாரும் என்று கூறுவர்." எனவே, சிறுபான்மை மற்றையோரும் பாங்கனாதல் உண்டென்று கொள்ளுதலால் தவறொன்றும் இல்லை. இனி அடுத்து நிகழும் தோழியிற் கூட்டம் மிக விரிவுடையது. ஆகவே அதனைத் தனியாக ஆராய்வது இன்றியமையாத தாகின்றது. 14. களவியல்-11 (5. உரை).