பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 - அகத்திணைக் கொள்கைகள் நிகழ்ச்சி தோழி அறிந்து கொண்டாள் என்று தலைவி அறிந் தாலும் பொறுக்காத நாணமுடையளல்லவா இவள்? இதற்குத் தொல்காப்பியரே வழியமைத்துக் காட்டுகின்றார். மெய்யினும் பொய்யினும் வழிநிலை ಟ್ಜ-78 பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் என்பது அவர் காட்டும் நெறி. மெய்யான நிகழ்ச்சியைக் கூடுயோ பொய்யான நிகழ்ச்சியைக் கற்பித்தோ' இருபொருள் படும்படி தொடர் அமைத்து எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு தலைவியின் நெஞ்சத்தை அறிய முயலவேண்டும் என்கின்றார். மகளிரின் நானுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை அவளுடன் நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப்பெண் வினவத் துணியாள். ஐங்குறு நூற்றில் கபிலர் தலைவியின் நானுணர்வை "என் தோழி நன நானுடையள்' என்று தோழியின் கூற்றாகப் புலப்படுத்துவர். ஈன்று வளர்த்த தாய்கூட தன் ஒரு மகளின் கரவு ஒழுக்கத்தைக் உசாவ மிகவும் அஞ்சுவள். அகநானூற்றுத் தாய் ஒருத்தியின் கூற்றால் இதனை அறியலாம். உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந்துணர என்னா தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந் துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நானுவள் இவளென நனிகரந் துறையும் யான் " (உவக்குநள் உவப்பு அடைவாள்; உடலுநள் - மாறு படுவாள்; என்னார் - கருதாராய்; அவர் வினை அவர் கூறும் தொழில்; உரைப்பு - உரைத்தல்). 'தன் மகள் ஒழுகும் நெறியைத் தாயே அறிந்து கொள்ளட்டும். இது பற்றி நமக்கென்ன கவலை? என்று வாளா இராது அலர்வாய்ப் பெண்கள் பல நாளாக ஓய்வு ஒழிவு இன்றி “நின்மகள் இன்னள், இனையள் என்று அலட்டுகின்றனர். நானோ அவளிடம் அதுபற்றி வாய்கூடத் திறப்பதில்லை. 11. களவியல் - 24. - 12. கலி - 60 இல் இதன் விளக்கம் காண்க. 13. கலி - 37 அகம் 32; இவற்றில் விளக்கம் காண்க. 14. ஐங்குறு - 205 15. அகம் 203,