பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் ......................................................................................... 81


ஒருங்கு இருக்கும் நேரமே, தலைவன் குறையுறுதற்கு ஏற்ற தாகும். ஏனெனில், அவன் குறையுறும் நேரத்தில் அவன் குறிப்பையும் அக்குறைபாடு கேட்ட அவள் குறிப்பையும் தோழி ஒப் பிட்டுணர்ந்து ஐயம் கொள்ளுதற்கு வாய்ப்பினை நல்கும். இதனாற்றான்,

    இரந்து குறையுறாது கிழவியும் தோழியும் 
    ஒருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப்
    ........................................
    மதியுடம் படுத்தற்கு உரியன் என்ப" 

என்று இறையனார் களவியல் ஆசிரியர் கூறிச் சென்றார். செவ்வி நோக்கி’ என்பதற்கு அதன் உரையாசிரியரும் அன்னதோர் பதம் நோக்கி என்று விளக்கமும் தந்தார். திருச்சிற்றம்பலக் கோவை யாரும் இங்ஙனமே தலைவியும் தோழியும் தலைப்பெய்த செவ்வி யையே கூறும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'தலைவியும் தோழியும் ஒருங்கு தலைப் பெய்த செவ்வி பார்த்தாயினும், தோழி தனித்துழியாயினும்' (தனித்தபோதாயினும்) என்று கூறுவதால் தோழியை மட்டும் தனியே இருப்பக் கண்டு தலைவன் குறையுறு தலும் உண்டு என்று கொள்ளலாம். எனினும். முன்னதே சிறப்பாகும். தலைவன் தினைப்புனம் செல்லும் நேரத்தில் தலைவியும் தோழியும் ஒன்றாய்க் கூடித் தனியே ஓரிடத்தி விருத்தல் அரிதினும் அரிதன்றோ எனின், அஃது அரியதே யாயினும், விதி இவர்களைக் கூட்டுதலிலேயே முனைந்து நிற்ற லால், இவர்கட்கு உற்ற இடையூறுகள் யாவும் விலகிப் போக அஃது எளிதாகவே முடியும் என்று கொள்ளல் வேண்டும். -

இங்ஙனம் பணிப்பெண்ணாகிய தோழி மாட்டுச் சென்று இரந்து நிற்றல் இவனுடைய வரம்பிகந்த பெருந்தகைமைக்கு இழிவன்றோ என்று வினவலாம் தலைவியைக் கூடுதல் வேண்டு மென்று மிக்கெழுந்த காமவிருப்பத்தின்முன் ஏனைய தன்மைகள் யாவும் தலையெடுத்து நில்லாது வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிய வசிக் சாய்ந்து படுத்த புல்லைப்போல மடிந்து கிடக்குமாதலின் தலைவன்வேறொன்றும் தோன்றப் பெறாமல் அக்காதல் எழுச்சி இன்றிற்கே ஆற்றானாய் அவள்பாற் சென்று குறையிரப்பானாத லால், அதனால் ஓர் இழிவு உண்டாம் என்று அவன் கருதுதல் இல்லை இங்ஙனம் செல்பவன், -...........................................................................................

3. இறை. கள-6. அ-3