பக்கம்:அகத்திய முனிவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                              அகத்திய முனிவர்.


களை உதவி வருகின்றன. வானும் வையமும் வணங்க, ஞானபானுவாய் விளங்கி, ஆன்மகோடிகளுய்ய அருள் புரிந்திருக்கும் இந்த அற்புத மூர்த்தியின் பிறப்பு, இருப்பு, குணம், செயல், பெருமை முதலியவற்றை அமைந்தவரை ஆராய்ந்து அறிந்து மகிழ்தல் நமக்குச் சிறந்த கடமையாம். நமக்கு மூல முதலாயுள்ள இச்சீலமுடையாரைச் சிந்தித்துப் போற்றலே நாம் வந்ததன் பயனாம்; வருநலம் பெரிதாம்; வாழ்க்கையும் வனப்பாம்.

                            மு த ல் இ ய ல் 
                                பிறப்பு
    பூமாது மனமகிழப் புவிமாது தினமகிழப் போதன் மேய காமாது மிகமகிழ நல்லறங்கள் துள்ளியெழ நரரின்போங்க மாமாண்புதமிழெய்த வந்தெழுந்தசுந்தரனாம் அகத்தியப்பேர்க் கோமான்மெய்ச் சரிதமவ னருள்வலியால் அறிந்தவரைகூறுகின்றேன்.
    கும்பமுனி, கலசமுனி, குடமுனி, கும்ப சம்பவன் என்பன இவர்க்குப் பெயர்களாக அமைந்துள்ளன. அவை யாவும் இவர் குடத்திலிருந்து உதித்தனர் என்பதை உணர்த்திநிற்கின்றன. கும்பம் = குடம். சம்பவம்= பிறப்பு. பிறவாநிலையில் வந்துள்ளவர்களது பிறப்பு முறையெல்லாம் பெரும்பாலும் புதுமையாகவே பிறந்திருக்கின்றன. அவற்றுட்சில சரித்திர ஆராய்ச்சிக்கு விருத்தமாய்க் காணப்படுகின்றன. சில, வியப்பிற்கேதுவாயுள்ளன; சில, புனைந் துரையோ என நினைந்துகொள்ள நேர்கின்றன; சில, தோற்றத்தில் இகழ்ச்சிக்கு ஏதுவாய்த் தோன்றுகின்றன; இன்ன