பக்கம்:அகத்திய முனிவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அகத்திய முனிவர்


அகத்தியம் என்பது அவசியம் எனப் பொருள்படு மாதலால் இவ் வுலகிற்கு அவசியமாய் அஃதாவது இன்றி யமையாது நின்றிருந் தமையால் அது நேர்ந்ததெனவும், இன்னவாறு பல வகையாக எதுக்களை இசைத்துக் காணும் படி இப்பெயர் இசைந்துள்ளது.

இனி, தமிழுக்கு உயிராதாரமாய் இவர் உற்றிருந்த மையால் அவ் இயைபு தோன்ற அகத்தியன் என இவர் அழைக்கநின்றார் எனினுமாம். என்னே இயைபு? எனின், "அகர முதல் னகர இறுவாய்" என்ற இயலுரையின் படி அகரத்தை முதலிலும், னகரத்தை இறுதியிலும், தமிழ் மொழி அமையப் பெற்றிருத்தல்போல் அதனை வளர்த்து வந்த இவர் பெயரும் அவ்வாறே முதலில் அகரமும் முடிவில் னகரமும் முடியக்கொண்டுள்ளமை காண்க.

இனி, எம் பெருமானாகிய ஆறுமுகத் தெய்வத்தின் அருள்மிகப் பெற்றவராதலால் அம் மூர்த்தியின் மந்திரம் ஆறெழுத்துக்களால் அமைந்து சடாக்கரம் என விளங்கி நிற்றல் போல் அவரடியவராகிய இவர் பெயரும் ஆறு எழுத்துக்களால் அமைந்து அகத்தியன் என நின்றதெனினுமாம் இன்னணம் பலவாறாகக் காரணம் கருதிப் பகுத்துப் பகுத்துப் புலவர்கள் அதனைப் பாராட்டுதற்குக் காரணம் இப் பெருமானுக்கு அது பெயராய் அமைந்து நிற்கும் பெருமிதமே யாம். "பேர்சொல்லி வாழலாம் பிள்ளை தலைமுறைக்கு" என்று சொல்லும் பழமொழி இங்கு உள்ள நின்றது. இவர் பெயரைக் கேட்டவுடனே ஒர் பெரியார் என்னும் புனித வுணர்ச்சி எவர் மனத்தும் இனிது தோன்றும்.