பக்கம்:அகத்திய முனிவர்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அகத்திய முனிவர். யைஎடுத்துத்தந்து இவரைப்பாடும்படி வேண்டினன். இவர், முதலில் நீ பாடுக; அப்புறம் கான்; என்ருர். அவன் அவ் வாறே முத்துறப்பாடினன். அதன்பின் இவர் யாழ்தழிஇப் பாடினர். அது பொழுது அங்கிருந்த விலங்கினங்களும, பறவைகளும், ஊர்வனவும் உள்ளங் குழைந்து அருகுவங்து சலியாது கின்றன. மரங்கள் அசையாது அடங்கின. எதிரி விருந்த ஒர் மணிக்கற்பாறை உருகி நின்றது. 'கருக்களும்சலியா, முந்நீர்ச் சலதியும்கலியா, நீண்ட பொருப்பிழி யருவிக்காலு நதிகளும் புரண்டுதுள்ளா; அருட்கடல் விளக்கதே இன்னிசை யமுதமாந்தி மருட்கெட அறிவன்தீட்டி வைக்கசித் திரமேயொத்த வன்றரை கிழிய வீழ்போய் வான்சினை கரித்துகின்ற ஒன்றறி மரங்களெல்லாம் செவியறி வுடையவாகி மென்றளி ரீன் று, போது விரிந்து, கண்ணிரும் சோர நன்றறி மாந்தர்போல நகைமுக மலர்ந்த மாதோ. பைத்தலை விடவாய்நாகம் பல்பொறி மஞ்சைநால்வாய் மத்தமா னரிமான்புல்வாய் வல்லிய மருட்கையெய்தித் தத்தமா மறியாவாகிக் கலைத்தலை மயங்கிச்சோர இத்தகைமாவும் புள்ளும் இசைவலைப் பட்டவம்மா!' என்றபடியே அன்றிவர்.இசையில் உயிர்கள் உருகிகின்றன. அயலொன்றையும் அறியாமல் கண்ணிர்மல்கி இராவணன் பரவசமா யிருந்தான். பின்பு பெருமகிழ்வோ டெழுத்தான். இவரை உவந்து பணிந்தான். என் உயிரினும் இனிய இசைஞானியே உமக்கு என்ன வேண்டும்” என்ருன். இன் அறுமுதல் இப்பக்கங்களில் வந்து எவர்க்கும் இடரிழைக்கா மல் இருக்கவேண்டும் என்ருர்; அவன் இசைந்து .ே ாற்றி குன்; மீண்டும்பணிந்து உறவுடையணுய் எழுந்து போயி ஞன். அதிமுதல் அரக்கர் பயமின்றி மக்கள் மகிழ்ச்சியுற்