பக்கம்:அகத்திய முனிவர்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 அகத்திய முனிவர்.

நிழற்பொலி கணிச்சிமனி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்.

கண்டனன் இராமனை வரக்கருணை கூரப் புண்டரிக வாணயானம் நீர்பொழிய நின்றான் எண்டிசையும், ஏழுலகும், எவ்வுயிரும் உய்யக் குண்டிகையின்ற போருவில் காவிரி கோணர்ந்தான்.(எ)

    அடிதொழுத'இராமனைத் தழுவிகநின்றது.

நின்றவனை வந்தநெடி யோன்அடி பணிந்தான் அன்றவனும் அனபோடு தழீஇ அழுதகண்ணுன் நன்றுவர வென்றுபல நல்லுரை பகர்ந்தான் என்றுமுள தென்தமிழ் இயம்பி யீசைகோண்டான். (அ) (இராமாயணம்.)

   இவரது அருமையம்; செயற்கரியன வெல்லாம் செய்து முடித்தபெருமையும், உலகமுய்ய உதவிநிற்கும் உரிமையும், பிறவும் இதன்கண் ஒளிர்வன காண்க. இராமரைத் தழுவிக் கொண்டுபோய்த் தம் தவச்சாலையில் இருத்தி அறிவுரைகள் பலகூரி இவர் இனிதுபசரித்தார். ' 'என் இல் 

லின்கண் வந்து விருந்தின்னுயிருந்தது. யான்செய்த அருந்தவத்தின் பெரும்பயனே".என்று இவர் உவந்துரைத்தார். அவ்வுரையைக் கேட்டபொழுது அவர் உள்ளமுருகினர்; தஙது செந்தாரைக் கண்களினின்று வெள்ளம் பெருக மெய்மயிர் சிலிர்த்தார்; வள்ளலே! என வணங்கி மொழிந்தார், அவா அடில் காண்க.