பக்கம்:அகத்திய முனிவர்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பு. 47 வாசவனே முதலானேர் மாதவத்தோர் விதிமுறையோர் மகிழ்ந்து செய்த பூசனைகொண் டாங்கவர்கள்பொன்னுலகிற்போயினவின் புாைதீர் உள்ளக் கோசலநாடன் காணக் கொண்டாடிப் பூசித்துக் குசல வார்த்தை பேசியினி கிருந்த கற்பின் பெருந்தவத்தோன் இவை யிவையே பின்புபேசும். (உத்தரகாண்டம்) (உ) இங்ஙனம் அமரர்கோன் முதலாக அண்வரும் போன பின் இராமனைமட்டும் தம்முடன் தனியே இருக்கவைத்து இனிய வுரைகள் பல இன்புற ஆடினர். பின்பு அன்பு கூர்ந்து ஒர் அரிய மணிமாலையை எடுக் து அவனுக்குக் கொடுத்தார். கொடைக் குரிசிலாகிய அக்கோமான் அதனை ங்கி வாங்கி மகிழ்ந்து பார்க்கான். விலை வரம்பின்றி விளங்கி நிற்கும் அதன் மேன்மையை வியத்து வியந்து நோக்கினன். காடுறை வாழ்க்கைசெய்யும் அடிகளுக்கு இப் பீடுடைய மாலை எப்படிக்கிடைத்தது என்று பேணி வின விஞன். இது மிக நன்னயமுடையது. ஒருவகையில் நம் பால் வந்ததென்ருர். அவ்வரவு என்னவகையில் எய்தியதெ ன்று அவன் பின்னருங்கேட்டான். இவர் புன்னகைசெய்து அதன் தன்மையை உரைத்தார். அடியில் வருதல் காண்க. சுவேதன். பண்டு சுவேதன் எனப் பெயரிய அரசைெருவனிரு ஆான். அவன் அருந்திறலும் பெருந்திருவு முடையவன். விரும்பியபோகங்களை நுகர்ந்து இம் மேதினியை ஆண் டான். பின்பு அருந்தவம்புரிந்தான். அதன் பயணுக அய