பக்கம்:அகத்திய முனிவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அகத்திய முனிவர். இன்று காட்ட வந்தீரா? என்று அவன் காட்டி நகைக்கான் யாண்டும் அஞ்சாத வீரனுகிய உன் நெஞ்சினுள்ளும் இல் அச்சமுள்ளதா? என்று அவர் அசைக்திப் பார்த்தார். அவ் ஆண்டகை யாதும் அசையவில்லை. இக் கவச்சிங்கத்தின் தனியாற்றலை அவ் வசச்சிங்கம் உணர்ந்தமைந்திருக்குங் கன் மையை வியந்து அவர் அகன்று போயினர். வதுவாதிபன், திராவிடபூபன், கிருகபவன், கவோன், சுகுணன், முதலிய அரசர் பலரும் இவரையடைந்து உயர்நல மடைந்து அமரரும் புகழ விளங்கியிருந்தார். இன்னவகையே இயல்நெறி வழாமல் மன்னுயிர்க்கெல் லாம் இன்னருள் செய்து எண்ணிய இடங்களில் இவர் இனி தமர்ந்திருந்தார். இவர் இருக்க இடங்களெல்லாம் தவமண மும், தமிழ்மணமும் கமழ்ந்து தெய்வப்பெற்றியுடையனவாய் த்திகழ்ந்து விளங்கின. மதிநலம்வாய்ந்த மாதவர் பலர் ஆண்டு தோறும் ஒருங்கு திரண்டுபோய் இவரினிதிருக்க தனிநிலையங் களைத் தரிசித்து வந்துள்ளார். இன்றும் இவர் திருவுருவமை ந்த ஆலயங்கள் பொதியமலை முதலிய இடங்களில் இருந்து வருகின்றன. நேரிசை வெண்பா. பொதியுமுக லாய புனிதநிலை யெல்லாம் புதிய நலங்கள் பொலிய-முதியதவஞ் செய்திருந்த ஐயன் றன் சேவடியைத் தம்மகத்தே பெய்திருந்தார் பெற்றுயர்ந்தார் பே.அறு.