பக்கம்:அகத்திய முனிவர்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணம் 59 முனிவராவர். இவ்வகைச் சீலமுடையாாை இஞ்ஞாலம் நாளும் சித்தித்துப் போற்றும். உள்ளும் புறமும் ஒத்து உயர்வுள்ளி கிற்போரே என்றும் உயர்ந்து திகழ்வர். அகக் தில் புனிதமெய்தி மிக மகத்துவ முடையாா யமைந்திருந் தமையால் இவர் அகத்தியர் என நின்ருர். இவரது நிலை யினை வியந்து அமாமுனிவர் என அமாரும் துதித்தார். நல்ல எண்ணங்களை நாளும் கினைந்து வந்தால் உள்ளம் புனிதமாம் என உயிர்களுக்கு இவர் உணர்த்தி வந்தார். இனிய நீரால் உடம்பு தாய்மையாம்; நல்ல குணங்களால் உள்ளம் புனிதமாம்; மனத்தைத் தாய்மைப்படுத்தி எனப் பல நலங்களும் எளிதிலெய்து மாறு விளைத்து நிற்றலால் நற்குணங்களை மானத தீர்த்தம் என்பர். இவ்வுத்தம நீர்மை யில்லாகார் வேறு எத்தகைய நீர்களில் எவ்வாறு சென்ருடி லும் அவர் செவ்வியாாகார். அகத்தில் அழுக்கை விைக்கக் கொண்டு புறக்கோலம் செய்தால் அதனல் என்னுகிப் போம்? கள்ளுப் பானையை வெள்ளத்திலழுத்திக் கழுவியது போல் உள்ளத்தீமை புள்ளவன் ரோட்டம் எள்ளத்தக் கதேயா மென்க. இனிய குணங்களாகிய புனித நீரே உயர்கோாாடுதற்குரிய அருமைத் தீர்த்தமாகக் கருதப் பட்டுள்ளது. அடியில் வருவது காண்க. 'சத்தியம், தானம், சம்மதம், இன்சொற்சாற்றுதல், ஒரு வழிப் படுதல், புத்தியே முதல காணம் ஒர் நான்கும் அடக்குதல், புலன்கள் போம் வழியில் உய்த்திடாதமைத்தல், பொறை திடம், ஞானம், உயிர்க் கெலாம் தண்ணளி புரிதல் இத்திறமன்த்தும் மானத தீர்த்தம் என வெடுத்தியம் பினர் மேலோர். (3)