இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61 குணம்
மானமதாணி ஆணியிற் றாங்கல்;
அழுக்கா றின்மை; அவாவிற் றீர்தல்;
அருந்துயர் உயிர்கட் கிருந்த காலை
அழல்தோய் வுற்ற மெழுகே போலக்
கழலு நெஞ்சிற் கையற் றினைதல்;
பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்கு
அறிவும், பொறியும், கழி பெருங்கவினும்,
பெறற் கருந் துறக்கமும், இறப்ப வூங்குத்
தம்மினும் வேண்டுமென் றெண்னும் பெருங்குணம்;
வாக்கொடு சிவணிய நோக்கின் மீக் கொள
அறம்பெரி தறைதல்; புறங்கூறாமை;
வாய்மை, கல்வி, தீமையிற் றிறம்பல்;
இன்மொழி யிசைத்தல்; வன்மொழி மறத்தல்;
அறிவு நூல் விரித்தல்; அருமறை கழறல;
அடங்கிய வறைதல்; கடுஞ்சொல் விடுத்தல்;
காயத் தியைந்த வீயா வினையுள்,
அருந்தவம் தொடங்கல்; திருந்திய தானம்;
கொடைமடம் படுதல்; படைமடம் படாமை;
அமரர்ப் பேணல்; ஆகுதி அருத்தல்;
ஒழுக்க மோம்பும் விழுப்பெருங் கிழமை;
உடம்பிடி யேந்தி யுடல்தடிந்திடுமா
ரடைந்த காலை அவணியல் துயரம்
தேரா ரல்லர், தெரிந்தும் ஆருயிர்
பெரும்பிறிதாக விரும்பிண மிசைஞரின்
ஓராங்குப் படரா மாசில் காட்சி;
ஐம்பெரும் பாதகத் தாழி நீந்தல்;
இந்தியப் பெரும்படை யிரிய நூறும்