பக்கம்:அகத்திய முனிவர்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவமயம்

            அகத்திய முனிவர்.
               காப்பு
  உலகம் இன்பி லுயர்ந்து சமம்பெறத்
  திலக மாகத் திகழ்ந்தருள் தென்முனி
  அலகில் மாக்கதை யானறிந் தோதிடக்
  குலவு மாமத குஞ்சரங் காப்பதே. (க)


              வணக்கம்
  திங்கள் வேணியன் தந்த செழுங்கனி
  மங்கை வள்ளிகை அள்ளிய மாணிக்கம்
  எங்கள் கற்பக இன்னருள் நீழலில்
  தங்கு மாமுனி தாண்மலர் சூடுவாம். 
              நூன்முகம்.
  இந்நிலவுலகம் நெடிய கடல்களைப் புடைதழுவி அகன்று பரந்து நலங்கள் சுரந்து அளவிடலரிய படி பல கோடி பொருள்களை மருவி என்றும் இனிதா நின்று நிலவுகின்றது. காலத்தோறும் சிலபல மாறுதல்கள் காணப்படினும் தன்காட்சியை மாறாது காட்டி இஞ் ஞாலம் மாட்சி