உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகத்திய முனிவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5-வது இயல். பெருமை i i r = . இனி இவரது பெருமையை அறிந்து மகிழ இங்கு உரிமைப் புள்ளோம். 'பெருமையுடையவர் ஆற்றுவார் ஆற்றின், அருமைவுடைய செயல்” (குறள் 975) என்னும் திருமொழிக்கு இவர் ஒர் பொருளாய் கின்று செயல் புரி, தமை முன்னர் அறிய கின்றது. முற்கூறிய செயல் நலங் களானே இவரது உயர் நிலை இனிது புலனும்; ஆயினும் இவ் அண்ணலின் எ ண்ணரிய பெருமைகளை இயன்றவரை யும் ஈண்டு எண்ணி மகிழ்வோம். எல்லா நூல்களிலும் i. ■ H == E. = y.o. e இவருடைய புகழ மணம கமழ்ந்துகொண்டிருக்கின்றது. இருக்கு, யசுர், சாமம், அகர்வணம் என்னும் நான் மறைகளுள் முதல்வதாகிய இருக்கு வேதத்தில் இவர் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. இவரது சிறப்பு நலங்கள் பலப்டியாகப் பாராட்டப்படுகின்றன. சாயனர் வாதாயனர் முதலிய வடமொழி மேதாவிகள் பலர் இவர் செயன்முறை களை வியந்து போற்றுகின்றனர். வானும் வையமும் உய்யும் வண்ணம் இராமகாதை யைத் தேனும் அமிர்தமும் என்னச் செய்தருளி அதனல் ஆதிகவி எனப் பேர்பெற்றுச் சீர்மிக்குள்ள மாதவராகிய வால்மீகி முனிவர் இவரது பெயரமைதியையும், அதனைச் சிந்திப்பதல்ை வரும் பயனையும் குறித்துத் தமது இராமா யணத்தில் உளமகிழ்ந்துரைத்துள்ளார். வியாசமுனிவரும் தமது நூலாகிய பாாதத்தில் இவரைப் பாராட்டியிருக்கின் முர். மணிமேகலை, கந்தபுராணம், மச்சபுராணம், தணி 11