பக்கம்:அகத்திய முனிவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெருமை "சிவனை நிகர் 85 பொதியவரை முனிவன் அகமகிழ இருசெவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே" (திருப்புகழ்) “கூட டஞ்சுமந்த நெடுமுடி நேரி விண்டடையாது மண்புகப் புதைத்த குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்" (கல்லாடம்) இன்னவாறு இவர் படிமுறை கூறி வருவன காண்க. தமிழ் இயல் நலங்களை முழுதும் உணர்ந்து விழுமிய நிலையில் இவர் ஓர் நூல் அருளியி ருந்தார். பெயரால் அகத்தியம் என நிலவி நின்றது. நிகழ்ந்த கடல்கோள் முதலிய காரணங்களால் அது, இவர் இடையில் அது அழி வுற நேர்ந்தது சில சூத்திரங்கள் மட்டும் தலைகால் மாறி நிலைதவறி நூலுரைகளில் அருகிக் காணப்படுகின். றன. "வயிர வூசியும் மயன்.வினை இரும்பும் ர செயிரறு பொன்னைச் செமமை செய் ஆணியும் தமக்கமை கருவியும் தாமாம்; அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே."(1) "இலக்கிய மின்றி இலக்கணம் இன்றே; எள்ளின்றாகில் எண்ணெயும் இன்றே; எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்' "தொகுத்த கவியைச் சொற்சொல்லாகப் த பகுத்துப் பொருள் சொலல் பதவுரையாமே. (3) என இன்னவண்ணம் வருவன சில அகத்தியச் சூத்தி ரங்கள் என்று எண்ணப்படுகின்றன. இயல் இசை நாடகம் என்னும் மும்மைத் தமிழையும் செம்மையுறச் செய்து மக் கட்கு நன்மை புரிந்து பொதியமலையின்கண் நண்ணி யிருந்து முதிய புலமையைப் பேணிவந்தாராதலால் இனிய தமிழ் மொழிக்கு முதல்வராக இவர் எண்ண நின்றார்.