பக்கம்:அகத்திய முனிவர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

86 அகத்தியமுனிவர். "சாந்திக் கூத்தே விநோதக் கூத்தென்று ஆய்ந்துற வகுத்தனன் அகத்தியன்தானே" (சயந்தம்) "அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு" (பாரதம்) என இவ்வகையாக மொழிநிலையில் இவர் செயல் வகை கள் பல செப்பப் படுகின்றன. தம் கருத்தைப் பிறர்க் குணர்த்தவும் பிறர் கருத்துக்களைத் தாம் உணர்ந்து கொள் ளவும் கருவியாயமைந்து, மக்கள் இனிது வழங்குதற்குத் தனியுரிமையாயுள்ள மொழிகள் இயல்பான சொல்லுருவி லும், செயலான இசைவடிவிலும், அயலான அவிநய நிலை யிலும் இயலுமாதலால் அவற்றை இவர் அழகுற செய்து இயல், இசை, நாடகம் எனத் தெளிவுற இசைத் துள்ளார். இங்ஙனம் கலைநிலையில் இவர் தலைமை எய்தி யுள்ளமையால் புலவரெவரும் குலகுருவாக்கொண்டு தம் புலமை நலம்பெற இவரைப்போற்றி நின்றனர். 'சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பரமாசாரியன் பதங்கள் சிரமேற் கொள்ளுதும் திகழ்தரற் பொருட்டே" "முத்தமிழ் அகத்திய முதனூல் உரைத்த வித்தகன் அடிமலர் விளக்கும் சித்தநின்றுத்தமச் செந்தமிழ் இயல்பே' வகை என இவ்வாறு அறிஞர் பலரும் இவரை ஏத்தி வரு கின்றனர்.'கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்தாம் வரம்பாகிய தலைமையர்; எனக் கீரர் கூறியவாறு இவர் வீறுபெற்று நின்றார். இவர் பெயரைச் சிந்தித்து வரின் கல்வி நலனும், பல் வகை நலங்களும் கைவரும் என்பர். இவர் பெயரால் ககோளமண்டபத்தில் ஒரு நட்சத்திரம் உள்ளது; அது