பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
                அகத்திய முனிவர்.


  'ஆற்றினிடை வலைச்சிதன்பாற் பிறந்தவரும், நெட்டாற்றி
         னருகின் நாணல்
   தூற்றினிடைப் பிறந்தவரும், தொடுகடத்தில் பிறந்தவரும்
         தோற்று மெய்வேர்
  வூற்றினிடைப் பிறந்தவரும், உள்ளத்திற் பிறந்தவரும்,
         ஒருமான் ஈனும்
  ஈற்றினிடைப் பிறந்தவரும், கிளிவயிற்றில் பிறந்தவரும்
         எதிர் கொண்டாராம்.'
                      (பிரபோக சந்திரோதயம்)
  இயற்கைக்கு மாறான பிறப்பு முறைகளும், அங்ஙனம் பிறந்து வந்தார் பின்பு சிறந்த முனிவர்களாய்த் திகழ்ந்து நின்ற திறங்களும் இதன் கண்ணும் விளங்கியுள்ளன காண்க. ஞான சீலராய் இசை திசை பரவ எழுந்து நிற்கும் ஏசுநாதர் கன்னிவயிற்றில் பிறந்தார் என்னும் உண்மையையும் ஈண்டு உளங்கொண்டுணர்க.
  இங்ஙனம் நம் அறிவாராய்ச்சிகளுக்கு எட்டாதவகையில் பெரியார் தோற்றங்கள் பல பெருகியுள்ளன. வினை வயத்தராய் வரும் பொதுமக்களினும் அருள் வயத்தராய் அவதரிக்கும் அம் முனிமக்களுக்கு இத்தகைய வேறுபாடுகள் சில பெரும்பாலும் வேண்டப்பட் டுள்ளன. தேவ குமாரர்களாய் நிலவி நிற்கும் அவர்தம் வரவு முறைகள் இப் பாவ வுலகில் பகுத்தறிதற்கு முடியாதபடி முடித்து நிற்கின்றன. அவை அவர்களை நாம் வியந்து போற் றுதற்கு ஏதுக்களாகவும் ஒரு வகையில் அமைந்து திகழ்கின்றன