பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகத்திய முனிவர். சிங்கமாதி திரியக்கி யோனிகள் தங்கிடாதது; சார்புள் ளகன்றது; துங்கமானுடர் தோற்றம் இலாததோர் கொங்குலாமலர்ச் சோலையைக் கூடினேன். அன்னகானகக் கம்புயப் பூவணை அன்னம்பேடையொ டன்போ டுறங்குவ தன்னகங்கள் கழுவிய தாழ்கடல் அன்னபூந்தட வாவிகண் டேனரோ, ஆய வாவி மருங்கிடை யாருமில் துளய ஆச்சிரமங் கண்டு துன்னிருள் மேயவல்லதிற் றங்கி விடிந்தபின் காயமாக ஒருசவம் கண்டனென், அன்னகாலை யாம்பையர் ஆடிட, மன்னுமாதவர் சூழ்தா, மாகதர் துன்னினத்திடத் தும்புரு நாரதர் என்னபோவென எங்கனும் பாடிட: இந்திராதி இமையவர் போற்றிட வந்து தோன்றினன் மாமணித்தேரின்மேல் அந்தார் விமானத்தடங் தேரினின் றிந்தமன்னன் இழிந்திது செய்தனன். சாரவங்க சவத்தினைத் தன்வயி ருரவுண்டு பெயர்த்தணி பொய்கையில் வாரிமொண்டு குடித்துவாய் பூசிநற் றேரிலேறிப் புகுதலும் சென்றுயான். தேவ இச்சவத் தின்றிடக் காரணம் நீவிளம்புதி, கின்பெய ரேது நீ யாவன்? என்ன எழின் மணிப் பூணினேன் பாவநாச எனக்கிவை பன்னிஞன். (எ ) (ہے)