பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

களிற்றியானை நிரை

௯௭

 (வி - ரை.) பித்திகம், மாரிக்காலத்தே தழைத்து அக் காலத்து அந்தியில் மலர்வது; அதன் மலரின் புறம் சிவப்பாயிருத்தலின் செவ்வரி படர்ந்த கண்ணிற்கு உவமை; இதுவே பிச்சி என்று வழங்கப் பெறுவது. நின் மழைக்கண்ணும் தளிர் மேனியும் வேறுபட்டு வருந்தாமல் வரைவொடு வந்தார் என்பது குறிக்கத் தோழி தலைவியை அங்ஙனம் விளித்தனள். வந்தமையால் எழுந்த மகிழ்ச்சி என எழுவாய் வருவித்து முடிக்கப்பட்டது.

சென்று சேக்கல்லாப் புள்ள - சென்று தங்காத பறவைகளை யுடைய; பறவைகள் சென்று தங்காத என்றபடி; இது கேடில்லாதவன் என்பதனை, இல்லாத கேட்டையுடையவன் என்பது போல நின்றது. 1'அருங்கேடன்' என்பதனைச் 'சென்று சேக்கல்லாப் புள்ள வுள்ளில் - என்றூழ் வியன்குளம்' என்பதுபோலக் கொள்க” எனப் பரிமேலழகர் உரைத்ததுங் காண்க. சேக்கல் - தங்கல். கோட்ட, புள்ள, குளம் என்க. வரை - மூங்கிலுமாம். மாறு : மூன்றாம் வேற்றுமைப் பொருள்படுவதோர் இடைச் சொல்; 2'அனையை யாகன் மாறே' என்பதுபோல.



43. பாலை

(தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.)


கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி
என்றூழ் உழந்த புன்றலை மடப்பிடி
கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய

ரு) நிலனும் விசும்பும் நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர்மருங் கறியா தஞ்சுவரப் பாஅய்த்
தளிமயங் கின்றே 3தண்குரல் எழிலி, யாமே,
கொய்யகை முல்லை காலொடு மயங்கி

க0) மையிருங் கான நாறு நறுநுதற்
பல்லிருங் கூந்தல் மெல்லியல் மடந்தை
நல்லெழில் ஆகஞ் சேர்ந்தனம் என்றும்
அளியரோ வளியர் தாமே அளியின்
றேதில் பொருட்பிணிப் போகித்தம் .

கரு) இன்றுணைப் பிரியும் மடமை யோரே.

- மதுரையாசிரியர் நல்லந்துவனார்.

(சொ - ள்.) க-அ. தண் குரல் எழிலி - தண்ணிய முழக்கத்தைக் கொண்ட மேகங்கள் பெய்யும் கார் காலமானது, கடல் முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை - கடலின் நீரை முகந்து


1. குறள் உக௦. 2. புறம். ௪. (பாடம்) 3. இன்குரல்.