பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

களிற்றியானை நிரை

௧௦௩




ரு) அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை
வண்டூது பனிமலர் ஆரும் ஊர
யாரை யோநிற் புலக்கேம் வாருற்று
உறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல்
பிறரும் 1ஒருத்தியை நம்மனைத் தந்து

க௦) வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங்
கூறேம் வாழியர் எந்தை செறுநர்
களிறுடை அருஞ்சமந் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் 2கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூ ரன்னஎன்

கரு) ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநின் தகைக்குநர் யாரோ.

- அள்ளூர் நன்முல்லையார்.

(சொ - ள்.) க-௪. சேற்று நிலை முனைஇய செங்கண் காரான் - சேற்றில் நிற்றலை வெறுத்த சிவந்த கண்ணினையுடைய எருமை, ஊர்மடி கங்குலின் . ஊரார் துயின்ற இருளில், நோன் தளை பரிந்து - தனது வலிய தளையை அறுத்துக்கொண்டு, கூர்முள் வேலி கோட்டின் நீக்கி - கூரிய முள் வேலியைத் தனது கொம்பினால் அகற்றி விட்டு, நீர்முதிர் பழனத்து - நீர்மிக்க வயலில், மீன் உடன் இரிய - மீன்கள் எல்லாம் ஓட, அம் தூம்பு வள்ளை மயக்கி - அழகிய உட்டுளையை யுடைய வள்ளைக் கொடியை மயங்கச் செய்து, தாமரை வண்டு ஊது பனிமலர் ஆரும் ஊர - வண்டுகள் உள்ளிருந்து ஊதும் தாமரையின் குளிர்ந்த மலரை நிறையத் தின்னும் ஊரனே!

எ. யாரையோ நின் புலக்கேம் - நின்னை யாம் புலத்தற்கு நீ என்ன உறவினை; |

எ-க0. பிறரும் - இவ்வூரார் பிறரும், வார் உற்று உறை யிறந்து ஒளிரும் - நீட்சியுற்று மழைக்கால் விழ்ச்சியினையுங் கடந்து விளங்கும், தாழ் இருங் கூந்தல் ஒருத்தியை - தாழ்ந்த கரிய கூந்தலையுடை யாள் ஒருத்தியை, நம் மனைத் தந்து - எம் மனையிற் கொணர்ந்து காட்டி, வதுவை அயர்ந்தனை என்ப - நீ அவளை வதுவை புரிந்தனை என்று கூறுவர்;

க0-க. எந்தை அஃது யாம் கூறேம் வாழியர் - எந்தையே அதனை நீ செய்தாயென யாங்கள் சொல்லேம், நீ வாழ்வாயாக;

கக-௪. செறுநர் களிறு உடை அருஞ் சமம் - பகைவர்களது யானைகளைக் கொண்ட அரிய போரினை, ததைய நூறும் - சிதைந்தி டக் கொல்லும், ஒளிறு வாள் தானை - ஒளி வீசும் வாட்படையினை யுடைய, கொற்றச் செழியன் - வெற்றி பொருந்திய செழியனது, பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன - நெற்பொலி மிக்க அள்ளூரை யொத்த,


1, (பாடம்) பிறளும். 2. கொற்கைச் செழியன்.