பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



47

களிற்றியானை நிரை

௧௦௫


காலத்து, ஊடல் உள்ளத்தாற் கூடப்பெறாதாள், செல்கெனக் கூறி விடுத்து ஆற்றுதற் கண்ணும்' எனப் பொருள் கூறி, அதற்கு இச் செய்யுளை எடுத் துக் காட்டினர் நச்.

1'உறுகண் ணோம்பல் ' என்னுஞ் சூத்திரத்து, தோழி அறிவுடையளாகக் கூறற்கு உதாரணமாக 'பிண்ட நெல்லின் . . . தகைக்குநர் யாரோ' என்னும் பகுதியைக் காட்டி, என்பது, 'உறுகண் காத்தற் பொருட்டாகத் தலைவி வருந்தினும் நீ செல்லென்றாள், தலைவன் செல்லாமை அறிதலின்' என்று அவருரைத்தமை அவர் கற்பியலிற் கூறியதனோடு கூற்றுவகையால் மாறுபடுகின்றது. 2'கிழவோட் குவம மீரிடத் துரித்தே' என்னும் சூத்திரத்து, தலைமகள் மருதத்து உள்ளுறை உவமம் கூறற்கு, ‘தாமரை வண்டூது . . . புலக்கேம்' என்பதனை எடுத்துக் காட்டினர் பேரா.



47. பாலை


[தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது.]


அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினையிவண் முடித்தன மாயின் வல்விரைந்து
எழுவினி வாழிய நெஞ்சே ஒலிதலை
அலங்குகழை நரலத் தாக்கி விலங்கெழுந்து

ரு) கடுவளி உருத்திய கொடிவிடு கூரெரி
விடர்முகை அடுக்கம் பாய்தலின் உடனியைந்து
அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்
ககன்சுடர் கல்சேர்பு மறைய மனைவயின்

க0) ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலிற்
குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியனகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டுளர் கொல்லெனக் கலிழ்வோள் எய்தி

கரு) இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்
மழைவிளை யாடும் வளங்கெழு சிறுமலைச்
சிலம்பிற் கூதளங் கமழும் வெற்பின்
வேய்புரை பணைத்தோள் பாயும்
நோயசா வீட முயங்குகம் பலவே.

- ஆலம்பேரிச் சாத்தனார்.

(சொ - ள்.) ௩. நெஞ்சே வாழிய-,

க-உ. அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப - சோர்தலில்லாத நம் உள்ளம் மேலும் மேலும் (ஊக்கத்தாற்) சிறப்ப, வினை இவண்


1. தொல். பொருளியல், ௪௫. 2. தொல். உவம. உ௬.