பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௦௮

அகநானூறு

[பாட்டு


(சொ - ள்.) க-௩. அன்னாய் வாழி - அன்னையே வாழ்வாயாக ; வேண்டு அன்னை - அன்னையே யான் கூறுவதனை விரும்பிக் கேள்; நின் மகள் -, பழங்கண் கொண்டு - துன்பம் எய்தி, பாலும் உண்ணாள் - பாலையும் பருகாளாய், நனி பசந்தனள் என வினவுதி - மிகவும் பசந்துள்ளாள் என வினவுகின்றனை,

௩--எ. அதன் திறம் யானும் தெற்றென உணரேன் - அது வந்த வழியினை யானும் தெளிவாக உணர்ந்திலேன், மேல் நாள் - முன்பு ஒருநாள், மலி பூஞ் சாரல் - பூக்கள் நிறைந்த மலைச் சாரலில், என் தோழிமாரோடு - என் தோழியருடன், ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி - தழைத்த கிளைகளை யுடைய வேங்கையின் பூவினைக் கொய்யச்சென்ற காலை, புலி புலி என்னும் பூசல் தோன்ற - புலி புலி என்னும் ஆரவாரந் தோன்ற,

அ-க௪. கண் போல் - மகளிர் கண்ணினைப்போலும், ஒண் செங்கழுநீர் ஆய் இதழ் - ஒளிபொருந்திய அழகிய செங்கழுநீர்ப் பூக்களை, ஊசி போகிய சூழ் செய் மாலையன் - ஊசியாற் கோத்துச் சுற்றிக் கட்டிய மாலையனாய், பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் - தலையின் ஒரு பக்கத்தே கொண்ட வெட்சிப்பூவாலாய கண்ணியனாய், குயம் மண்டு ஆகம் - மகளிர் முலைகள் பாய்தற்குரிய மார்பில், செஞ்சாந்து நீவி - சிவந்த சந்தனத்தைப் பூசி, வரிபுனை வில்லன் - வரிந்து புனைந்த வில்லையுடையனாய், ஒருகணை தெரிந்து கொண்டு - ஒப்பற்ற கணையினை ஆய்ந்து கைக்கொண்டு (ஒரு தலைவன் தோன்றி), அம் மா படர் திறம் யாதோ' என - அப் புலி சென்றவழி யாதோ என்று, வினவி நிற்றந்தோன் - வினவி நின்றனன்;

க௪-௬. அவற் கண்டு - யாங்கள் அவனைக் கண்டு, எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி - எங்களுள் ஒருவர் முதுகில் ஒருவர் உடல் மறைந்து ஒடுங்க, நாணி நின்றனெம் ஆக - நாணுற்று நின்றேமாக,

க௬ - ௯. பேணி ஐவகை வகுத்த கூந்தல் - விரும்பி ஐவகையாக வகுத்த கூந்தலினையும், ஆய் நுதல் - அழகிய நெற்றியினையு முடைய, மையீர் ஓதி மடவீர் - கரிய நெய்த்த கூந்தலையுடைய மடவீரே, நும் வாய் பொய்யும் உளவோ என்றனன் - நுமது வாயிற் பொய்ச் சொற்களும் உளவாமோ என்று கூறி,

க௯-உஉ. அக் குன்று கிழவோன் - மலை நாட்டிற்குரியனாகிய அவன், பரி முடுகு பையெனத் தவிர்த்த தேரன்-பரிகளின் வேகத்தை அடக்கி மெல்லெனச் செலுத்தும் தேரனாகி, நின் மகள் உண்கண் . நின் மகளது மையுண்ட கண்களை, எதிர் மறுத்துப் பன்மாண் நோக்கி - நோக்கியபின் எதிர்நோக்கலாகப் பலமுறை நோக்கா நின்று, சென்றோன் - சென்றனன்;

௨௩-ரு. பகல் மாய் அந்தி-பகற்பொழுது மாய்கின்ற அந்தி யாகிய, படுசுடர் அமையத்து-ஞாயிறு மறையும் பொழுதிலே, அவன் மறை தேஎம் நோக்கி - அவன் மறைந்திடுந் திசையை நோக்கி,