பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

களிற்றியானை நிரை

௧௧௫




தினின்றும், பிரியின் - பிரிந்து செல்வதானே, புணர்வதாயின் - கை கூடுவது ஒன்றாயின்,

க-க௪. மாண் நெஞ்சம் - எனது நல்ல மனமே, நீங்குதல் மறந்து - அவளை நீங்குதலை மறந்து, பிரியாது ஏந்து முலை முற்றம் - ஒன்றி னொன்று பிரியாது நெருங்கி நிமிர்ந்த முலைப்பரப்பு, வீங்க - விம்மவும், சேய் இழை தெளிர்ப்ப- சிவந்த அணிகள் ஒலிக்கவும், பல்லூழ் கவைஇ - பலமுறையுந் தழுவி, நாளும் - நாடோறும், மனைமுதல் - தலை வியானவள், வினை யொடும் உவப்ப- இல்வாழ்க்கைத் தொழிலோடும் மகிழும்படி, நினை - நினைவாயாக.

(முடிபு) நெஞ்சம்! பொருட்பிணி மாயோள்வயின் பிரியின் புணர்வதாயின், அவளை நீங்குதல் மறந்து, வீங்க, தெளிர்ப்பக் கவைஇ, மனைமுதல் உவப்ப நினை.

யாத்துச் சினை யிருக்கைப் பெடை எனவும், நோக்கி எழும் எருவைச் சேவல் எனவும் இயையும்.

(வி-ரை.) எரி - வெம்மை . பல் இதழ் - பூவிற்கு ஆகுபெயர். வயின் - இடம், இடத்தினின்றும் என விரிக்க. மனை முதல் - மனைவி. வினை - அறவோர்க் களித்தல், விருந்தெதிர் கோடல் முதலிய இல்வாழ்க்கைத் தொழில். பிரியின் இவள் இறந்துபடும் என்பது கருதி, நீங்குதல் மறந்து உவப்ப நினை என்றான்.

(மே - ள்.) 1'கரணத்தி னமைந்து' என்னும் தலைவன் கூற்று நிகழுமாறு கூறிய சூத்திரத்து, ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் இளம்.



52. குறிஞ்சி


[தலைமகள் வேறுபட்டமை யறிந்த செவிலித் தாய்க்குத் தோழி அறத்தொடு நிற்குமெனத் தலைமகள் சொல்லியது.]


வலந்த வள்ளி மரனோங்கு சாரற்
கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
இன்னா விசைய பூசல் பயிற்றலின்

ரு) ஏகல் அடுக்கத் திருளளைச் சிலம்பின்
ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம்
மலைகெழு சீறூர் புலம்பக் கல்லெனச்
சிலையுடை யிடத்தர் போதரு நாடன்
நெஞ்சமர் வியன்மார் புடைத்தென அன்னைக்

க0) கறிவிப் பேங்கொல் 2அறிவியேங் கொல்லென
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை


1, தொல், கற்பியல். ௫. (பாடம்) 2. அறியலங்கொல்.