54
களிற்றியானை நிரை
௧௨௧
பொன் னுடைத் தாலி என் மகன் ஒற்றி - பொன்னாலாய தாலியினை யுடைய என் மகனை நினைந்து, வருகுவையாயின் - இவண் வருதி யாயின், தருகுவன் பால் என - நினக்கும் பால் தருவேன் என, தீவிய. மிழற்றி - இனிய மொழிகள் கூறி, விலங்கு அமர்க் கண்ணள் - ஒருக் கணித்து நோக்கும் அமரிய கண்ணினளாய், விரல் விளி பயிற்றி - விரலால் அழைத்தலைப் பயிலச் செய்து, புதல்வற் பொய்க்கும் - தன் புதல்வனைத் தன் கருத்துணராமை மறைக்கும், திதலை அல்குல் எம் காதலி பூங்கொடி நிலை - தேமல் அணிந்த அல்குலினை யுடைய எம் காதலியாய பூங்கொடி போல்வாள் நிலையினை,
௬. காண்குவம் - காண்போம்.
(முடிபு) பாக! வேந்தனும் பகை தணிந்தனன் ; காரும் தலையின்று; தேரும் கடவுக; தீவிய மிழற்றி, விளி பயிற்றிப் புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலை காண்குவம்.
ஆயம் மனைமனைப் படரும் மாலை எனவும், திங்கள் வருகுவையாயின் தருகுவென் பாலென விளி பயிற்றிப் பொய்க்கும் பூங்கொடி எனவும் இயையும்.
(வி-ரை.) விருந்தின் மன்னர் - புதியராய் மாறேற்ற அரசர். வேந்தனும் பகை தணிந்தனன் என்றமையால் தலைவன் வேந்தற் குற்றுழிப் பிரிந்தானாயிற்று. நச்சினார்க்கினியர் கருத்தின்படி இது அந்தணன் தூதிற் பிரிந்ததாகும் என்க. உள்ளுறுதல் நிலத்தின் ஈரத்தால் என்க.
குழவி பாலுண்ண வேண்டி என்பார் குழவியிடத்து வீங்குசுரை மடிய என்றார்.
கொடுமடி - அடகு பறித்திடுதற்கு வளைத்துக்கட்டிய மடி. சிறு குடி - காவிரியின் வடவயினுள்ளதோர் ஊர். திங்கள், விளி. என் மகன் ஒற்றி - என் மகன் நினைக்க என்றுமாம். இங்கு ஒற்ற எனத் திரிக்க.
(மே - ள்.) 1‘திணைமயக் குறுதலும்' என்னுஞ் சூத்திரத்து, இச்செய் யுள் கார்காலத்து மீள்கின்றான், முகிழ்நிலாத் திகழ்தற்குச் சிறந்த வேனி லிறுதிக்கண் தலைவி மாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது; இது முல்லைக்கண் வேனில் வந்தது 'என்றும்;
2‘அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன' என்னுஞ் சூத்திரத்து ' இப்பாட்டில், வேந்தன் பகைமையைத் தான் தணிவித்தமை கூறலின் அந்தணன் தூதிற் பிரிந்தமை பெற்றாம்' என்றும் கூறினர் நச்.
1. தொல், அகத். ௧௨. 2. தொல். அகத், உ௬.