பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

களிற்றியானை நிரை

௧௨௩

________________

புண் பட்டமைக்கு நாணின, சேரலாதன் -பெருஞ் சேரலாதன், அழி கள மருங்கின் - பொருதழிந்த களத்தின் புறத்தே, வாள் வடக்கு இருந்தென - வாளொடு வடக்கிருந்தானாக, இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் - அச் செய்தியாகிய இன்னாமையும் இனிமையும் உடைய உரையினைக் கேட்ட பெரியோர், அரும் பெறல் உலகத்து - பெறுதற்கரிய துறக்கத்திற்கு, அவனொடு செலீஇயர் - அவனோடு செல்லும் பொருட்டு, பெரும்பிறிது ஆகியாங்கு - உயிர் நீத்தாங்கு,

கரு-எ. இவண் காதல் வேண்டி - இவ்வலகத்து ஆசையை விரும்பி, என் துறந்து பிறிந்து - என்னை விட்டுப் பிரிந்து, போதல் செல்லா என் உயிரொடு - போதலைச் செய்யாத என் உயிரோடு, புலந்து - நொந்தேன்.

(முடிபு) யான் கானம் என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலன்; நெஞ்சமொடு கனவப் போதல் செல்லா என் உயிரொடு புலந்தேன்.

கழிந்ததற்கு உயிரொடு புலந்து, அழிந்தன்றோவிலன் எனக் கூட்டி முடித்தலுமாம்.

(வி - ரை.) சேரலாதன் வடக்கிருந்தெனக் கேட்ட சான்றோர் அவனொடு செலீஇயர் பெரும் பிறிதாகியாங்கு என் துறந்து போதல் செல்லா உயிர் என்க. உறால் - உறுதல். விளிமுறை அறியா - இன்ன விடத்தில் இன்ன துன்பம் வருமென் றறியாத. அழிந்தன்றோ: ஓ - ஒழியிசை. வாள் - வாளொடு. இன்னா இன்னுரை - மரிக்கின்றான் என்பதனால் இன்னாமையும், புறப்புண்பட்ட பழி தீர இருந்து உயிர் விடுகின்றான் என்பதனால் இனிமையும் உடைய உரை. அரும் பெறல் உலகம் - வீரர் எய்தும் துறக்கம். புலந்து - புலந்தேன்; தன்மை வினை முற்று. சான்றோர், தமக்கு அயன்மை யுடையான் வடக்கிருந்த வழியும் அவனொடு செல்லுதற்கு உயிர் துறந்தனர்; யானோ, என் மகளைப் பிரிந்தும் போகாத உயிருடன் கூடியுள்ளேன் என்று வெறுத்தாள் என்க.

(மே - ள்.) 1‘தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின்' என்னுஞ் சூத்திரத்து, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், 'கண்படை பெறேன் கனவ' என்பதனை எடுத்துக் காட்டி, முறையே உடன்போக்கின்கண் நற் நாய்க்கும் கனவு உரித்தாயிற் றெனவும், செவிலித் தாய்க்கும் கனவு உரித் தாயிற் றெனவும் கூறினர்.



56. மருதம்

[பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]


நகையா கின்றே தோழி நெருநல்
மணிகண் டன்ன துணிகயந் துளங்க



1. தொல். பொருளியல், ௪.