பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஉசு

அகநானூறு

[பாட்டு




குறுங்கால் இற்றிப் புன்றலை நெடுவீழ்
இரும்பிணர்த் துறுகல் தீண்டி வளிபொரப்
பெருங்கை யானை நிவப்பில் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீளிடை

க௦) யாமே எமியம் ஆகத் தானே
பசுநிலா விரிந்த பல்கதிர் மதியில்
பெருநல் ஆய்கவின் ஒரீஇச் சிறுபீர்
வீயேர் வண்ணங் கொண்டன்று கொல்லோ
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்

கரு) முதுநீர் முன்றுறை முசிறி முற்றிக்
களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும்புண் உறுநரின் வருந்தினள் பெரிதழிந்து
பானாட் கங்குலும் பகலும்
ஆனா தழுவோள் ஆய்சிறு நுதலே.

- நக்கீரர்.


{சொ - ள்.) க-ரு. நெஞ்சே, சிறுபைந் தூவிச் செங்காற் பேடை - சிறிய மெல்லிய சிறகினையும் சிவந்த காலினையும் உடைய வாவற் பேடை, நெடுநீர் வானத்து - நெடிய தன்மையையுடைய வானினை, வாவுப் பறை நீந்தி - தாவிப் பறத்தலாற் கடந்து, வெயில் அவிர் உருப்பொடு வந்து - விளங்கும் வெயிலாலாகிய வெம்மையொடு வந்து, கனிபெறாது - கனிகள் பெறாமல், பெறுநாள் யாணர் உள்ளிப் பையாந்து - தான் முன்பு கனிகளைப் பெறும் நாளின் வளனை நினைந்து துன்புற்று, புகல் ஏக்கற்ற - பண்டுபோற் பயன் மரங்களிற் புகுதற்கு ஏங்கி யிருப்பதும்,

ரு-அ. புல் என் உலவைக் குறுங்கால் இற்றி - பொலிவற்ற கிளை களையும் குறிய அடியினையும் உடைய இற்றி மரத்தின், புன் தலை நெடுவீழ் - புல்லிய உச்சியினையுடைய நீண்ட விழுது, இரும் பிணர்த் துறுகல் தீண்டி - பெரிய சருச்சரையையுடைய உருண்டைக் கல்லைத் தீண்டி, வளி பொர - காற்றடித்தலால், பெருங்கை யானை நிவப்பில் தூங்கும் - பெரிய கையினையுடைய யானை உயர்ந்திருப்பது போற் றோன்றி அசைவதுமாகிய,

௯-க0. குன்ற வைப்பின் என்றூழ் நீளிடை - மலையிடத்தூர் களையுடைய வெம்மை மிக்க நெடிய காட்டில், யாமே எமியம் ஆக - யாம் தனித்திருப்ப,

கச-௯. கொய் சுவல் புரவி - கொய்த - பிடரி மயிரினை யுடைய குதிரைகளையுடைய, கொடித் தேர்ச் செழியன் - கொடி கட்டிய தேரினையுடைய பாண்டியன், முது நீர் முன் துறை முசிறி முற்றி - பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து, களிறுபட எருக்கிய கல் என் ஞாட்பின் - யானைகள் மடியக் கொன்ற கல்லென்னும் ஒலியுடைய போரில், அரும்புண் உறுநரின் - விழுப் புண்பட்டவர் போல, வருந்தினள் பெரிது அழிந்து - மிகவும் மனம்