பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪௦

அகநானூறு

[பாட்டு


களை அழைக்கும் குரலின வாய்த் தொழுவிலே நிறையப் புகும், ஆபூண் தெண்மணி ஐது இயம்பு இன்னிசை - ஆக்கள் பூண்டுள தெள்ளிய மணிகளின் அழகிதாய் இயம்பும் இனிய ஒலியை, புலம்பு 'கொள் மாலை கேட்டொறும் - தனிமையைக் கொண்டுள்ள மாலையிற் கேட்குந்தொறும், கலங்கினள் உறைவோள் கையறுநிலை - கலங்கி யுறைவோளாகிய நம் தலைவியது செயலற்ற நிலையை,

க. களையும் இடன் - நீக்கும் காலம் இதுவே யாகும்.

(முடிபு) பாக, நீ வள்பு தெரிய, இளையர் முடுக, நாம் செலவு அயர்ந்தன மாயின், வாரணம் சிதற ஏறு நாகு தழீஇப் பெயரும் பொழுதில், ஆவின் மணி இசை மாலை கேட்டொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலை களையும் இடம் இது.

(வி - ரை.) தலைவன் ஊர்ந்து செல்லும் குதிரை பறவை போலும் விரைந்த செலவினதா மென்பது, 1’வினைவயிற் பிரிந்தோன் மீண்டு வருங்காலை, யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை, யுள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான' எனத் தொல்காப்பியனார் கூறுமாற்றானும் அறிக. ஐதியம்புதல் - நடக்க நடக்க விட்டிசைத்தல் என்றலுமாம்.

(மே - ள்.) 2’எருமையும் மரையும் பெற்றமும் நாகே' என்னும் சூத்திரத்து, பெற்றத்திற்கு நாகு எனும் பெண்பாற் பெயர் வந்ததற்கு, 'உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ' என்பதனை எடுத்துக் காட்டினர், - பேரா.65. பாலை


[வேறுபட்ட தலைமகட்குத் தலைமகன் உடன் போக்கு வலித்தமை தோழி சொல்லியது.]


உன்னங் கொள்கையொ டுளங்கரந் துறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரியம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்

ரு) நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற்
பாடிச் சென்ற பரிசிலர் போல - .
உவவினி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொ டொராங்குச்
செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும்

க0) மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரி
மீன்கொள் பரதவர் கொடுந்திமில் நளிசுடர்
வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு
மேவரத் தோன்றும் யாஅஉயர் நனந்தலை


1. தொல். கற்பு. ௫௩, 2. தொல், மரபு. ௬உ.