பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

களிற்றியானை நிரை

௧௪௧


உயவல் யானை வெரிநுச்சென் றன்ன

கரு) கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக்
காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல்
ஆறுகடி கொள்ளும் அருஞ்சுரம் பணைத்தோள்
நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை
நிரையிதழ் உண்கண் மகளிர்க்கு

உ0) அரிய வாலென அழுங்கிய செலவே.

-மாமூலனார்.

(சொ - ள்.) எ-அ. பொம்மல் ஓதி - பொலிவுற்ற கூந்தலை யுடையாய், தோழி வாழி - , அவரே - நம் தலைவர்,

க-க௬. மலை தொறும் மால்கழை பிசைந்த கால் வாய் கூர் எரி - மலைகள்தோறும் பெரிய மூங்கில்கள் உரசிக்கொள்வதால் உண்டாகிய காற்று வீசுவதால் மிக்க தீச்சுடர்கள், மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் - மீன் பிடிக்கும் பரதவர்களது வளைந்த படகில் தோன்றும் மிக்க சுடர்கள், வான்தோய் புணரி மிசைக் கண்டாங்கு - வானளாவிய கடல் அலையின் மீது காணப்படுமாறு, மேவரத் தோன்றும் - பொருந்தத் தோன்றும், யா உயர் நனந்தலை - யா மரங்கள் உயர்ந்துள அகன்ற இடத்தில், உயவல் யானை வெரிநுச் சென்றன்ன - பட்டினியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகில் நடந்து செல்வதுபோலும், கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி - பாறையில் ஏறியும் இறங்கியும் செல்லும் மூங்கில்கள் சாய்ந்த சிறு நெறிகளையுடைய, காடு மீக் கூறும் கோடு ஏந்து ஒருத்தல் - காட்டை மேம்படச் சொலற்குக் காரணமான நிமிர்ந்த கோட்டினையுடைய களிறு, ஆறு கடி கொள்ளும் அருஞ்சுரம் - வழி யினைக் காவல் பூண்டிருத்தற்குரிய அரிய சுரநெறிகள், ப்ணைத் தோள் நாறு ஐங் கூந்தல் கொம்மை வரி முலை - மூங்கில் போன்ற தோளினை யும் மணம் நாறும் ஐவகைக் கூறுபாடும் அமைந்த கூந்தலினையும் திரண்ட தேமலையுடைய முலையினையும், நிரையிதழ் உண்கண் மக ளிர்க்கு - பூப்போலும் மையுண்ட கண்ணினையும் உடைய மகளிர்க்கு, அரிய என அழுங்கிய செலவு - செல்லற்கு அரியவாகும் எனத் தாழ்த்திருந்த போக்கினை,

அ-௯. நம்மொடு ஓராங்குச் செலவு அயர்ந்தனர் - இதுபோது நம்மோடு ஒரு பெற்றியே உடன் செல்ல விரும்பினர் ஆதலின்,

க-சு. உன்னம் கொள்கையோடு - நம் கருத்தினை உணர்ந்து கொண்ட அறிவுடன், உளங் கரந்து உறையும் - தானறிந்தவற்றைக் கரந்து அவற்றை வெளியிட்டுக் கூறாதே செலுத்துகிற, அன்னை சொல்லும் உய்கம் - அன்னையின் கடுஞ் சொல்லினின்றும் தப்புவோம். என்னதும் ஈரம் சேரா இயல்பின் - சிறிதும் அன்பு பொருந்தாத இயல்பினை யுடைய, பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் - பொய்ம் மொழி கூறும் சேரிப் பெண்டிர்களது, கெளவையும் ஒழிகம் - அலரினையும் நீங்குவோம்;