பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪௨

அகநானூறு

[பாட்டு


௫-எ. நாடு கண் அகற்றிய உதியஞ் சேரல் - தன் நாட்டினைப் பிறர் நாட்டினை வென்று கொண்டமையான் விரிவாக்கிய உதியஞ் சேரலாதனை, பாடிச் சென்ற பரிசிலர் போல - பாடிச் செல்லும் பரிசிலரைப் போல, உவ இனி - இப்பொழுது மகிழ்வாயாக.

(முடிபு) பொம்மலோதி! தோழி! அவர் அருஞ்சுரம் மகளிர்க்கு அரியவா லென அழுங்கிய செலவை இன்று நம்மொடு செலவயர்ந்தனர், ஆகலின் அன்னை சொல்லும் உய்கம்; சேரிப் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல இனி உவ.

மலைதொறும் கூரெரி கொடுந்திமில் நளிசுடர் புணரிமிசைக் கண்டாங்குத் தோன்றும் அருஞ்சுரமெனவும், நனந்தலைச் சிறு நெறி ஒருத்தல் ஆறு கடிகொள்ளும் அருஞ்சுரமெனவும் இயைக்க.

(வி - ரை.) உன்னம் - கருத்து; இது உன்னல் என்னும் வினை யடியாகப் பிறந்த பெயர். சேரியம் பெண்டிர் : அம் - அசை, யானையின் முதுகின் மேல் சென்றன்ன சிறுநெறி, கல்லூர் பிழிதரு சிறு நெறி என இயையும். புல் - மூங்கில். யானையையுடைய காடு, காட்டிற் சிறந்ததென்றார். யானை யுடைமையின் யாவரும் இயங்காமையின், ஒருத்தல் கடி கொள்ளும் சுரம் எனப்பட்டது. வரி - தொய்யிலுமாம். நிரை யிதழ் - நிரைத்த இதழை யுடையது என மலருக்கு ஆகுபெயர்.

(மே - ள்.) 1‘தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும்' என்னுஞ் சூத்திரத்து, 'விடுத்தற் கண்ணும்' என்பதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இஃது உடன்போக்கு நயப்பித்தது என்றனர் இளம்.

2‘இச் சூத்திரத்து' இச் செய்யுளை எடுத்துக் காட்டி இதனுள் அன்னை சொல்லும் பெண்டிர் கௌவையும் தலைவரும் விழுமமென்று (தோழி) தலைவிக்குக் கூறினாள் என்றனர் நச்.

3‘பெருமையும் சிறுமையும் மெய்ப்பா டெட்டன், வழிமருங் கறியத் தோன்று மென்ப' என்னுஞ் சூத்திரத்து, பாடிச் சென்ற பரிசிலர் போல, உவவினி வாழி தோழி' என்பது உவகையுவமை என்றனர்பேரா.



66. மருதம்


[பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப்புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]



இம்மை யுலகத் திசையொடும் விளங்கி
மறுமை யுலகமும் மறுவின் றெய்துப
செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப்

ரு) பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்


1. தொல். அகத். ௩௬. 2. தொல், அகத். ௩௬. 3. தொல். உவம, ௧௯.