பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

களிற்றியானை நிரை

௧௪௫


கொடுப்போற்கு - விடுப்போனுக்கு. தன்னைக் குபேரனும் போல்வன் எனக்கண்டார் சொல்லும்படி மகனொடு புகுதந்தோன் என்றுரைத்தலுமாம். இருவழியும் கிழவனும் என்ற உம்மை எச்சப் பொருட்டு. தான் மகனைப் புறஞ்செல்ல விடுத்தமையால், அவன் அது செய்தான் எனக் கொண்டு, 'யான் அது படுத்தனெனாதல் நாணி, என்றாள். அன்று - இயற்கைப் புணர்ச்சிக்காலத்து ஒரு நாள். அயர்ந்த மணன் - விரும்பிய மணம் என்றுமாம். -

(மே - ள்.) 1'பின் முறையாகிய பெரும் பொருள் வதுவைத், தொன் முறை மனைவி எதிர்ப்பா டாயினு, மின்னிழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினு, மிறந்த துணைய கிழவோ னாங்கட், கலங்கலு முரிய னென் மனார் புலவர்' என்னுஞ் சூத்திரத்திற்கு, இச் செய்யுளை உதாரணமாகக் காட்டினர் இளம்.

2‘நிகழ்தகை மருங்கின்' என்னுஞ் சூத்திரத்து, 'நிரைதார் மார்ப னெருந லொருத்தியொடு ... ' என்றது தலைவி புலவிக்கட் புகழ்ந்தது என் றும், 3‘வாயிற் கிளவி' என்னுஞ் சூத்திரத்து, தோழி வாயிலாகச் சென்றுழி, தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க; அஃது 'இம்மை யுலகு' என்னும் அகப்பாட்டினுட் காண்க என்றும் கூறினர் நச்.

4‘இன்பத்தை வெறுத்தல்' என்னுஞ் சூத்திரத்து, 'மெய்யே யென்றல்' என்றதற்கு' பொய்யை மெய்யென்று கூறுதல் என்று பொருள் கூறி, அது, 'கழங்காடாயத்து . . . அயர்ந்ததன் மணனே'; என்பது ; தானே தன் மகனை வாயில் கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங் கண்ணோட்ட மும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால் அப் பெயர்த்தாயிற்று என்றார் பேரா.




67. பாலை


[பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]


யானெவன் செய்கோ தோழி பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறைபுடன்
மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை

௫) அரம்போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்


1. தொல். கற்பியல், ௩க. 2. தொல். பொருளியல், ௩௪. 3. தொல். பொருளியல். சஎ - 4. தொல். மெய்ப். உஉ.