பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௫௨

அகநானூறு

[பாட்டு


(முடிபு) தோழி வாழி, மேனியும் கண்ணும் வரியும் நோக்கி ஆழல் ஆன்றிசின், நம்தலைவர் ஈதல் இன்பம் வெஃகிச் செய்பொருட்டிறவராகி, அத்தம் என்னாது ஏமுற்று, மோரியர் குறைத்த அறையிறந் தகன்றனராயினும், ஆய் கானத்து அலரி நாறும் நின் அலர் முலையாகத்தின் துயில் மறந்து எனையதும் நீடலர்.

(வி - ரை.) ஆன்றிசின் - அமைக. ஈதலால் இன்பமுண்டாகு மென்பதனை, 1'ஈத்துவக்கும் இன்பம்' என்பதனால் அறிக. செய் பொருட்டிறவர் - பொருள் செய்யும் கூற்றினர். மோரியர் வடநாட் டின் கண்ணிருந்த அரச வகுப்பினர். இவர்கள் சில பகைவரோடு போர் கருதித் தெற்கே சென்ற காலை, குறுக்காக நின்றதோர் மலையைத் தேருருள் செல்லுமாறு குறைத்து வழி செய்துள்ளார் என்ற வரலாறு, 'தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர், பணியா மையிற் பகைதலை வந்த, மாகெழு தானை வம்ப மோரியர், புனைதேர் நேமி யுருளிய குறைத்த, இலங்குவெள் ளருவிய வறைவா யும்பர்' (உருக) எனவும், 'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத், தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த, அறையிறந் தவரோ சென்றனர்' (உஅக)எனவும் இந்நூ லுள்ளும், 2'வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த, உலக விடைகழி யறைவாய் நிலைஇய' எனப் புறநானூற்றிலும் வருவனவற்றான் அறியப்படும். சிலை - ஒரு மரமுமாம். நன்கலம் தரூஉம் - பெற்ற கலன்களைப் பாணர் முதலாயினார்க்குத் தரும் என்றுமாம்.



70. நெய்தல்


[தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.]


கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டிக்
கொழுங்கண் அயிலை பகுக்குந் துறைவன்

௫) நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலருமாங் கறிந்தனர் மன்னே இனியே
வதுவை கூடிய பின்றைப் புதுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

க0) கானலம் பெருந்துறைக் கழனி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்,
விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை


1. குறள். உஉ அ. 2. புறம். கஎரு.