பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

களிற்றியானை நிரை

௧௫௩


கரு) வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவிந் தன்றிவ் அழுங்கல் ஊரே.

- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்.

(சொ - ள்.) க-எ. கொடுந் திமில் பரதவர் - வளைந்த படகினை யுடைய பரதவர், வேட்டம் வாய்த்தென - மீன்வேட்டை நன்கு கை கூடிற்றாக, இரும்புலாக் கமழும் - பெரிய புலால் நாற்றம் வீசும், சிறுகுடிப் பாக்கத்து - சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில், குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி - குறுகிய கண்களையுடைய அழகிய வலையின் பயனைப் பாராட்டிக் கூறி, கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன் - கொழுவிய கண்களையுடைய அயிலை மீனை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறைவன், நம்மொடு புணர்ந்த கேண்மை - நம்முடன் கொண்ட காதல் நட்பு, முன்னே - முன்பு, அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற - அலர்கூறும் வாயினையுடைய பெண்டிர் அம்பலாக்கிப் பரப்ப, பலரும் ஆங்கு அறிந்தனர் - அவ்விடத்துப் பலர் அறிவாராயினர், மன் - அது கழிந்தது;

எ-அ. இனி - இப்பொழுது, வதுவை கூடிய பின்றை - மணம் கூடிய பிறகு,

அ--கஎ. புதுவது பொன் வீ ஞாழலொடு புன்னை -புலிநகக் கொன் றையின் புதிய பொன்னிறப் பூக்களுடன் புன்னைப் பூக்கள் உதிர்ந்து, வரிக்கும் - ஓவியம் வரைந்தாற்போல் அழகு செய்யும், கானல் அம் பெருந்துறை - கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெருந்துறை களில், கழனி மா நீர் பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் - வயல்களின் கரிய நீரில் பசிய இலைகளையுடைய தழைத்த திரண்ட தண்டினை யுடைய நெய்தற் பூக்களை, விழவு அணி மகளிர் தழையணிக் கூட்டும் - விழாவிற்கு ஒப்பனை செய்யும் மகளிர்கள் தங்கள் தழை யுடைக்கு அணிசெயச் சேர்க்கும், வென்வேற் கவுரியர் - வெற்றி வேலினை யுடைய பாண்டியரது, தொல் முது கோடி - மிக்க பழைமை யுடைய திருவணைக் கரையின் அருகில், முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்றுறை - முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுற்றத்தில், வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த - வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற் பொருட்டாகப் புட்களின் ஒலி இல்லையாகச் செய்த, பல் வீழ் ஆலம்போல - பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல, இவ் அழுங்கல் ஊர் ஒலி அவிந்தன்று - இந்த ஆரவாரமுடைய ஊர் ஒலியடங்கப் பெற்றது.

(முடிபு) துறைவன் கேண்மை , பெண்டிர் அம்பல் தூற்ற, (முன்பு) பலர் அறிந்தனர்; இனியே, வதுவை கூடிய பின்றை , இராமன் அருமறைக்கு அவித்த ஆலம்போல இவ்வழுங்கலூர் ஒலியவிந்தன்று.

(வி - ரை.) பலரும் : உம் - அசை. மன் : கழிவின் கண் வந்தது. தழையணிக் கூட்டும் - தழை அணிக்குக் கூட்டும் என்க. இராமன்