உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௫௬

அகநானூறு

[பாட்டு


பூக்கள் முன்பு வளம் நிறைந்து தேன் வழங்கியன, இப்பொழுது வாடி வறியவாயினமையின், அவற்றிற்குக் குறைந்தோரை உவமை கூறினார். சினைப்பூ - வேனிற் காலத்து மலரும் மரங்களின் கோட்டிலுள்ள பூக்கள். 1'நறுந்தா துண்டு நயனில் காலை, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்' என வண்டு உவமை கூறப்படுவதும் ஈண்டு அறியற்பாற்று. மானினங்கள் வெம்மையால் வருந்த என்க. அந்தி - ஒரு பூவுமாம். வையறிவு எனப் பிரித்துக் கூரிய அறிவு என்றலுமாம். மஞ்சு - பல நிறத்தையுடைய மேகம். விலங்குவளி - சூறாவளி. புள் சூறாவளியால் அலைப்புண்டு மரத்தைவிட் டொழிதல் போல, என் உயிர் பிரிவால் வருந்தி உடலைத் துறக்கும் பொழுது இது கொல் என்றாள் என்க.

(மே-ள்.) 2'வேட்கை யொருதலை' என்னுஞ் சூத்திரத்து, தலைவி சாக்காடு என்னும் அவத்தை எய்தினமைக்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டினர் நச்.

3'கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்' என்னுஞ் சூத்திரத்து, உவம நிலைக்களத்து ளொன்றாகிய கிழக்கிடு பொருளிற்கு, 'உள்ளூதாவியிற் பைப்பய நுணுகி' என்பதனை எடுத்துக் காட்டினர் பேரா.



72. குறிஞ்சி


[(1) தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. (2) தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம்.]



இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்
துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்

௫) குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்புசெய் கொல்லெனத் தோன்றும் ஆங்கண்
ஆறே அருமர பினவே யாறே
சுட்டுநர்ப் பனிக்குஞ் சூருடை முதலைய
கழைமாய் நீத்தம் கல்பொரு திரங்க

க0) அஞ்சுவந் தமியம் என்னாது மஞ்சுசுமந்
தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்
ஈருயிர்ப் பிணஷின் வயவுப்பசி களைஇய
இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த

கரு) மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி


1. மணிமேகலை. கஅ : க௬ - ௨௦. 2. தொல், கள, ௬. 3. தொல். உவம. ௫.