உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

களிற்றியானை நிரை

௧௫௬


என்னழி பிரங்கும் நின்னொடி யானும்
ஆறன் றென்னா வேறல் காட்சி

௧௦) இருவேம் நம்படர் தீர வருவது
காணிய வம்மோ காதலந் தோழி
கொடிபிணங் கரில இருள்கொள் நாகம்
மடிபதம் பார்க்கும் வயமான் துப்பின்
ஏனலஞ் சிறுதினைச் சேணோன் கையதைப்

கரு) பிடிக்கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி
விடுபொறிச் சுடரின் மின்னிஅவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே.

-- எருமை வெளியனார்.


(சொ - ள்.) கக-எ. காதல் அம் தோழி - காதலை யுடைய தோழியே அவர் சென்ற தேஎத்து - தலைவர் சென்ற நாட்டில், கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்- கொடிகள் பின்னிய சிறு காட்டினிடத்தவாய இருண்ட நிறத்தையுடைய யானையின், மடி பதம் பார்க்கும் - சோரும் செவ்வியை பார்த்திருக்கும், வயமான் துப்பின் - அரியேற்றின் வலியினை யுடைய, ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதை - தினையின் வகையு ளொன்றாகிய அழகிய சிறு தினையைக் காக்கும் பரண்மேலுள்ளோன் கையின் கண்ணுள்ளதும், பிடி கை அமைந்த கனல்வாய்க் கொள்ளி - பிடி கையின்கண் பொருந்தியதும் தீவாய்த்தலை யுடையதுமாய் கொள்ளிக் கோல், விடு பொறிச் சுடரின் மின்னி - (வீசுங்கால்) விடும் சுடர்ப் பொறிகளைப் போல மின்னி, நின்றது மழையே - மழை காலூன்றிப் பெய்து நிற்கின்றது :

க-உ. பின்னொடு முடித்த - பின்னுதல் அளவில் முடித்திட்ட, மண்ணா முச்சி - வேறு ஒப்பனை செய்யாத கொண்டையில், நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ - நெய் தடவப்பெற்ற தாழும் குழலினைச் சேரக் கட்டி,

௩-௪. வெருகு இருள் நோக்கியன்ன - வெருக்குப் பூனை இருளிலே நோக்கினாற் போல, ஒரு காழ் முத்தம் கதிர் விடுபு இடை முலை விளங்க - முத்தின் ஒரு வடம் கதிர்விட்டு முலையிடையே விளங்க,

ரு-௬. அணங்கு உறு கற்பொடு - அருந்ததி போலுற்ற கற் பினால், மடம்கொள - மடம் மிக, சாஅய் - மெலிந்து, நின்நோய்த் தலையையும் அல்லை - நின் நோயளவில் வருந்தி நிற்பாயும் அல்லை;

௬- கக. தெறுவர என் ஆகுவள் அளியள் தான் என - அச்சம் உற இரங்கத்தக்காள் ஆகிய இவள் என் ஆகுவளோ என, என் அழிபு இரங்கும் - என் வருத்தத்திற்கும் இரங்காநின்றாய் ; அங்ஙனம் இரங்கும், நின்னொடு யானும் - நீயும் யானும், ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி - ஒருவர் செய்வது நெறியன்று என்று