பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

களிற்றியானை நிரை

௧௬௩


மேனி - அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும், ஐது அமை நுசுப்பின் - நுண்ணிதாய் அமைந்த இடையினையும், பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - பல மணிகள் கோத்த மேகலையையுடைய பக்கம் உயர்ந்த அல்குலினையும் உடைய, மெல்லியற் குறுமகள் - மென்மைத் தன்மையுடைய குறுமகளே நீ,

க-௩. ஆடவர் - ஆடவர்கள், பொருள் - உண்மைப் பொருளாவது, அருள் அன்றாக - அருள் அன்றாகிட, ஆள் வினை என - ஆள் வினையேயாகு மென, வலித்த - துணிந்த, பொருள் அல் காட்சியின் - உண்மையற்ற அறிவினையுடைய, மைந்து மலி உள்ளமொடு - வலி மிக்க உள்ளத்தால், துஞ்சல் செல்லாது - மடிதல் இல்லாது,

௪-- ௯, எரிசினம் தவழ்ந்த - எரியும் தீப் பரந்த, இருங் கடற்று அடைமுதல் - பெருங் காட்டிற் புகுமிடத்தே, கரிகு உதிர் மரத்த - இலைகள் கரிந்து உதிரப்பெற்ற மரங்களையுடைய, கான வாழ்க்கை - காட்டின் வாழ்க்கையையுடைய, அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் - கொல்லும் புலிபோலும் வலியையும் கட்டப்பெற்ற கழலையுமுடைய மறவர்கள், தொன்று இயல் சிறு குடி மன்று நிழல் படுக்கும் - பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்து நிழலிலே கண்படுக்கும், அண்ணல் நெடுவரை - பெருமையையுடைய நெடிய மலையிலுள்ள, ஆம் அறப் புலர்ந்த - நீரறக் காய்ந்த, கல் நெறிப் படர்குவர் ஆயின் - கல் வழியிற் செல்வா ராயின்,

௯- உ௪, நல் நுதல்--நல்ல நெற்றியினையும், செயிர்தீர் கொள்கை - குற்றமற்ற கொள்கையினையும், சின்மொழி - சிலவாய சொற்களையும், துவர்வாய் - பவளம் போன்ற வாயினையும், அவிர் தொடி முன் கை - விளங்கும் வளையலை யணிந்த முன் கையினையும், ஆயிழை - ஆய்ந்த அணிகளையுமுடைய, மகளிர் ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து - மகளிரது முத்தாரம் பூண்ட பரந்த முலை யையுடைய ஆகத்தில், ஆராக் காதலொடு - அமையாத விருப்புடன், தார் இடைக் குழையாது - தங்கள் தாரை இடையே குழையச் செய்யாதே, சென்று படுவிறல் கவின் உள்ளி - சென்றொழிந்த மிக்க அழகினை நினைத்து, என்றும் இரங்குநர் அல்லது - என்றும் இரங்குவாராவரே யல்லாது, இவ்வுலகத்தான் பெயர் தந்து யாவரும் தருநரும் உளரோ என - இவ்வுலகத்தே பெயர்த்து அவ்வழகினைத் தருவார் எவரேனும் உளராவரோ என்று இங்ஙனம், புலந்து பல கூறி - வெறுத்துப் பலவும் கூறி, ஆனா நோயை ஆக - அமையாத நோயுடையை ஆகவும், யான் - நான், அரிது பெறு சிறப்பின் நின் வயினான் - அரிதாக பெற்ற சிறப்பினை யுடைய நின்னிடத்தினின்றும், பிரியச் சூழ்தலும் உண்டோ - பிரியுமாறு கருதுதலும் உளதோ? இல்லையாகும்.

(முடிபு) குறுமகளே! நீ, ஆடவர் பொருளல் காட்சியின் உள்ளமொடு துஞ்சல் செல்லாது, கன்னெறிப் படர்குவராயின், சென்றுபடு விறற்கவின் உள்ளி இரங்குநர் அல்லது பெயர்தந்து தருநரும் உளரோ எனப் புலந்து பல கூறி ஆனா நோயை யாக, யான் நின்வயின் பிரியச் சூழ்தலு முண்டோ ? (சூழேன்.)