பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

களிற்றியானை நிரை

௧௭௩


எ-௩. முண்டகம் கலித்த முது நீர் அடைகரை - நீர்முள்ளி தழைத்த கடலையடைந்த கரையிலுள்ள, ஒண் பல் மலர கவட்டிலை அடும்பின் - ஒள்ளிய பலவாய மலர்களையுடைய கவடுபட்ட இலைகளையுடைய அடம்பினது, செங்கேழ் மென் கொடி ஆழி அறுப்ப - சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை (நின்) தேருருள் அறுத்து வர, இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ - மணிகளைப் பூண்ட ஓரினமாகிய குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்தி, மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் - ஒளியையுடைய இலையொடு பொலிந்த விளங்கும் பூங்கொத்துக்கள், அவிழ் பொன் தண் நறும் பைந்தாது உறைக்கும் - மலர்ந்த பொன்போலும் தண்ணிய நறிய செவ்வித் தாதுக்களைச் சொரியும், புன்னை அம் கானல் பகல் வந்தீமே - புன்னை மரங்களையுடைய அழகிய கடற்கரைச் சோலையில் பகலில் வருவாயாக;

ச-௬. எந்தை - எமது தந்தை, புணர்திரைப் பரப்பகம் துழை இத் தந்த-பொருந்தும் அலைகளையுடைய கடலகத்தே துழவிக்கொணர்ந்த, பல்மீன் உணங்கல் படுபுள் ஒப்புதும் - பலவகை மீன்களின் வற்ற லிற் பொருந்தும் புட்களை ஓட்டியிருப்பேம்; ஆகலின்,

௪. யாம் நினக்கு எவன் அரியம் - யாங்கள் நினக்கு எங்ஙனம் அரியமாவேம்?

(முடிபு) சேர்ப்ப, இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவில் வந்நோய், நெடுந்தேர் கடைஇ, புன்னையங் கானல் பகல் வந்தீமே; மீன் உணங்கல் படுபுள் ஓப்புதும்; யாம் நினக்கு எவன் அரியம் ?

(வி - ரை.) கோட்டு மீன் - கொம்பையுடைய மீன் ; சுறா மீன். இட்டுச் சுரம் - வழி சிறிதாகிய சுரம். நெறியருமை கூறியவாறு.

மலர அடும்பு எனக் கூட்டுக.



81. பாலை


[பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது.]


நாளுலா எழுந்த கோள்வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்
புல்லளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
ஒருங்கு முயன்றெடுத்த நனைவாய் நெடுங்கோ

ரு) டிரும்பூது குருகின் இடந்திரை தேரும்
மண்பக வறந்த ஆங்கட் கண்பொரக்
கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
நெறியயல் மராஅம் ஏறிப் புலம்பு கொள
எறிபருந் துயவும் என்றூழ் நீளிடை

க0) வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் சிறந்த