பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௭௪

அகநானூறு

[பாட்டு



செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மாவண் கடலன் விளங்கில் அன்னஎம்
மையெழில் உண்கண் கலுழ

கரு) ஐய சேறிரோ அகன்றுசெய் பொருட்கே.

- ஆலம்பேரி சாத்தனார்.

(சொ - ள்.) கரு. ஐய -, அகன்று செய் பொருட்கு - எம்மைப் பிரிந்து சென்று தேடும் பொருட்கு,

க0-க. சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் - சிறந்த தலைமை வாய்ந்த நும் உள்ளம் தூண்டுதலின்,

கக-௪. கறுத்தோர் - வெகுண்டெழுந்த பகைவரது, ஒளிறு வேல் அழுவம் - ஒளிர்கின்ற வேலினை யுடைய போர்க்களத்தை, களிறுபடக் கடக்கும் - யானைகள் மடிய வெல்லும், மாவண் கடலன் விளங்கில் அன்ன - மிக்க வண்மையையுடைய கடலன் என்பானது விளங்கில் எனும் பதியை யொத்த, எம் எழில் மை உண்கண் கலுழ- எமது அழகிய மையுண்ட கண்ணினளாய தலைவி அழ,

க-ச௬. நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் - விடியற் காலத்தே எழுந்து உலாவிய தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி, ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின் - உயர்ந்த கிளைகளையுடைய இருப்பை மரத்தின் இனிய பழத்தினை வெறுப்பின், பல்கிளைச் சிதலை - பல கிளைகளாய கறையான், நனைவாய் ஒருங்கு முயன்று எடுத்த - நனைந்த வாயால் ஒருங்குகூடி வருந்திக் கட்டிய, புல் அளைப் புற்றின் - புல்லிய வளைகளையுடைய புற்றினது, நெடுங் கோடு - நெடிய உச்சியினை, இரும்பு ஊது குருகின் இடந்து- இருப்பு உலையில் ஊதும் துருத்தியைப் போன்று (உயிர்த்துப்) பெயர்த்து, இரை தேரும் - இரையினை ஆய்ந்தெடுத்துண்ணும், மண்பக வறந்த ஆங்கண் - மண் பிளவுபட வறட்சியுற்ற பாலை நிலமாய அவ்விடத்து,

௬- க௦. கண் பொரக் கதிர் தெற - வெய்யில் கண்களைப் பார்க்க வொண்ணாதவாறு பொர ஞாயிறு காய்தலின், நெறி அயல் மராஅம் - நெறியின் அயலதாகிய வெண் கடம்புகளின், கவிழ்ந்த உலறுதலை நோன் சினை ஏறி - (தழைகள் வாடிக்) கவிழ்ந்துள காய்ந்த உச்சியினையுடைய வலிய கிளைகளில் ஏறி, புலம்பு கொள எறி பருந்து உயவும்- இரையினைப் பாய்ந்தெடுக்கும் பருந்து தனிமை கொள வருந்தும், என்றூழ் நீள் இடை - வெப்பம் மிக்க நீண்ட இடங்களாய, வெம் முனை அருஞ்சுரம் நீந்தி - வெவ்விய முனைகளையுடைய அரிய சுரத்தினைத் தாண்டி,

கரு. சேறிரோ - செல்லுவீரோ.

(முடிபு) ஐய! பொருட்கு உள்ளம் துரத்தலின், உண் கண் கலுழ, அருஞ் சுரம் நீந்திச் சேறிரோ.

உளியம் தீம்பழம் முனையின் நெடுங்கோ டிடந்து இரை தேரும் ஆங்கண் பருந்து உயவும் நீளிடை அருஞ் சுரம் என்க.