பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

களிற்றியானை நிரை

௧௮௧



இன்னம் ஆகவும் இங்குநத் துறந்தோர்
அறவர் அல்லர் அவரெனப் பலபுலந்து
ரு) ஆழல் வாழி தோழி சாரல்

ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
கன்றுபசி களைஇய பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதரு பூட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை
க0) நன்னாட் பூத்த நாகிள வேங்கை

நறுவீ யாடிய பொறிவரி மஞ்ஞை
நனைப்பசுங் குருந்தின் நாறுசினை யிருந்து
துணைப்பயிர்த் தகவுந் 1துனைதரு தண்கார்
வருதும் யாமெனத் தேற்றிய
கரு) பருவங் காணது பாயின்றால் மழையே.

--காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்.

(சொ - ள்.) க-ரு. தோழி வாழி -, நன்னுதல் பசப்பவும் - அழகிய நெற்றி பசந்திடவும், பெருந் தோள் நெகிழவும் - பெரிய தோள் மெலிந்திடவும், உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய். உண்ணாமையாலாய வருத்தத்தால் உயிர் நீங்க மெலிந்து, இன்னம் ஆகவும் - நாம் இந் நிலையினமாகவும், இங்கு நம் துறந்தோர் - இங்கு நம்மை விட்டுப் பிரிந்தார் நம் தலைவர், அறவர் அல்லர் அவர் - எனவே அவர் அறத்தின ரல்லர், எனப் பல புலந்து ஆழல் - என்றிவ்வாறு பலவுங் கூறி வெறுத்துத் துயரில் அழுந்தாதே ;

ரு--கரு. சாரல் - மலைச் சாரற்கண்ணே , ஈன்று நாள் உலந்த மெல்நடை மடப்பிடி கன்று பசி களைஇய - ஈன்று அணிமை கழிந்த மெல்லிய நடை வாய்ந்த இளைய பிடியினதும் அதன் கன்றினதும் பசியைப் போக்கற்கு, பைங்கண் யானை - பசிய கண்ணினையுடைய களிறு, முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் - மூங்கிலின் முற்றாத முளையினைக் கொணர்ந்து உண்பிக்கும், வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையனது வேங்கடமெனும் நீண்ட மலையில், நன்னாள் பூத்த நாகு இளவேங்கை - நல்ல நாட்காலையிற் பூத்த மிக இளைய வேங்கை மரத்தின், நறுவீ ஆடிய பொறி வரி மஞ்ஞை - நறிய பூக்களின் துகளை அளைந்த பொறிகளுடன் கூடிய வரிகளையுடைய மயில், நனைப் பசுங் குருந்தின் நாறு சினையிருந்து - தேனை யுடைய பசிய குருந்த மரத்தின் நறு மணம் வீசும் கிளையிலிருந்து, துணைப் பயிர்ந்து அகவும் துனை தரு தண் கார் - தன் துணையை அழைத்துக் கூப்பிடும் விரைந்து வரும் குளிர்ந்த கார்ப் பருவமே, யாம் வருதும் எனத் தேற்றிய பருவம் - நம் தலைவர் தாம் வருவோம் எனத் தெளிவித்த பருவமாகும், மழை பாயின்று - அதற்கு மழையும் பரவா நின்றது, அதுகாண் - அதனைக் காண்பாயாக.


(பாடம்) 1. துணைதரு தண்கார்.