பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௮௨

அகநானூறு

[பாட்டு

(முடிபு) தோழி, வாழி! நாம் இன்னம் ஆக, நம் தலைவர் நம்மைத் துறந்தார், அவர் அறவரல்லர், எனப் புலந்து ஆழல் ; தண் கார், யாம் வருதும் எனத் தேற்றிய பருவம், மழை பாயின்று, அது காண்.

யானை முளை தருபு ஊட்டும் வேங்கட நெடுவரை வேங்கை நறுவீயாடிய மஞ்ஞை குருந்தின் சினையிருந்து துணைப் பயிர்ந்தகவும் கார் என்க.

(வி - ரை.) நம் துறந்தோர் என்பது நத்துறந்தோர் என விகாரமாயிற்று. நாள் உலந்த - நாள் முடிந்த ; ஈன்றணிமை கழிந்த என்றபடி. பிடி கன்று இவற்றின் பசியென விரித்துக் கொள்க. வேங்கை பூக்குங் காலம் மணநாள் ஆகலின், நன்னாட் பூத்த என்றாள் எனலுமாம். கார் விரைவில் வந்துவிடும் என்பாள் துனை தரு தண் கார் எனவும், மழை பாஅயின்று எனவும் கூறினாள். எனவே இது வேனிற் காலத்து இறுதியாயிற்று. மஞ்ஞை துணைப் பயிர்ந்து அகவும் என்றது, கார் காலத்தில் பிரிந்திருத்தல் அருமையால் கூடுதற்கு அழைக்கும் என்றபடி.



86. மருதம்


[வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.]


உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
ரு) கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்

கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
க0) முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
கரு) நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
௨0) ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்

கொடும்புறம் வளை இக் கோடிக் கலிங்கத்