பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௮௪

அகநானூறு

[பாட்டு


கஎ. வதுவை நன்மணம் கழிந்த பின்றை - இங்ஙனம் நன்றாகிய வதுவைக் கல்யாணம் முடிந்தபின்பு,

கஅ- ௨௦. தமர் கல் என் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து - சுற்றத்தார் கல்லென்ற ஒலியினராய் விரைந்து வந்து, பேர் இற் கிழத்தி ஆக எனத் தர - பெரிய, மனைக் கிழத்தி ஆவாய் என்று கூறிக் கூட்ட, ஓர் இல் கூடிய உடன் புணர் கங்குல் - ஓர் அறையில் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய இரவில்,

உக-௬. கொடும்புறம் வளைஇ - முதுகினை வளைத்து, கோடிக் கலிங்கத்து - கோடிப் புடவைக்குள், ஒடுங்கினள் கிடந்த புறம் தழீஇ - ஒடுங்கிக்கிடந்த இடத்தினைச் சார்ந்து, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப - அணையும் விருப்புடன் முகத்தினை மூடியிருந்த ஆடையினை நீக்க, அஞ்சினள் உயிர்த்த காலை - அஞ்சி உயிர்த்த பொழுது, நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென- நின் உள்ளம் நினைந்ததனை மறையாது உரை என்று, பின் யான் வினவலின் - யான் பின்பு வினவுதலின், இன் நகை இருக்கை- இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையின்கண்,

உஎ-௩க. மாவின் மடங் கொள் மதைஇய நோக்கின் - மானின் மடத்தினைக் கொண்டதும் செருக்கினை யுடையதுமான நோக்கினையும், ஒடுங்கு ஈர் ஓதி - ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலினையும் உடைய, மாஅயோள் - மாமை நிறத்தினை யுடையாள்,

செஞ் சூட்டு ஒண் குழை வண்காது துயல்வர - சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை வளவிய காதின்கண் அசைய, அகம் மலி உவகையள் ஆகி - உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியினள் ஆகி, முகன் இகுத்து - முகத்தினைத் தாழ்த்து, ஒய்யென இறைஞ்சியோள் - விரைந்து தலைவணங்கினள்.

(முடிபு) வதுவை நன் மணம் கழிந்த பின்றை , தமர்தர ஓரிற்கூடிய கங்குல், கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த புறம் தழீஇ, முகம் புதை திறப்ப, அஞ்சினள் உயிர்த்தகாலை, நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென யான் வினவலின், மாயோள் முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோள்.

நாள் தலைவந்தென, அமலை நிற்ப, பந்தர் விளக்குறுத்து, மாலை தொடரி, முது செம் பெண்டிர் தரத் தர, மகளிர் நால்வர் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென, நீரொடு சொரிந்த அலரி கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றை என்க.

(வி - ரை.) மிதவை - பொங்கல் ; கும்மாயமுமாம். உண்பார் இடையறாமை பற்றி அமலை நிற்ப என்றான். ஞெமிரி - பரப்பி எனப் பிறவினைப் பொருட்டு. விளக்குறுத்து - தூய்மை செய்தும் என்றுமாம். கனை யிருளகன்றகாலை யென் றமையால், முற்பக்க (பூர்வ பக்கம்) என்பது பெற்றாம். கோள் என்றது ஈண்டுத் தீய கோள்களை. உரோகணி என்பதனை வருவித்து, விருப்புகழ் நாளாவது உரோகணி திங்களை அடைந்த நாள் என்னலுமாம். உரோகணியும்