பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

களிற்றியானை நிரை

௧௮௫


திங்களும் கூடிய நாள் கல்யாணத்திற்குச் சிறந்ததென்பது, 1'திங்கட், சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்து . . . வதுவை மண்ணிய மகளிர்' எனப் பின்னர் இந்நூலுள்ளும், 2'வானூர் மதியம் சகடணைய வானத்துச், சாலியொருமீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது' எனச் சிலப்பதிகாரத்துள்ளும் வருதலான் அறியப்படும். கல்யாணம் எல்லாரும் புகுதற்கு உரியதாகலின் 'பொது' எனப்பட்டது. பிணை - விருப்பம் ; 3'பிணையும் பேணும் பெட்பின் பொருள' என்பவாகலின், நெல்லொடு தயங்க என்றமையால் நெல்லும் சொரிந்தமை பெற்றாம். வதுவை மணமாவது - குளிப்பாட்டல். கோடிக் கலிங்கம் - புதுப் புடவை. ஓர்புறந் தழீஇ : ஓர், அசை. யாழ, அசை. தலைமகன் தோழிக்கு வாயின் மறுத்தவழிக் கூறியதாயின் தலைவி எக்காலத்தும் என்பால் இன்னதோர் அன்புடையள் ; அவள் கருத்தறியாது நீ கூறுகின்றனை என்றான் என்க.

(மே - ள்.) 4'கற்பெனப் படுவது' என்னுஞ் சூத்திரத்து, இச் செய் யுளைக் காட்டி, 'இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும், தமர் கொடுத்தவாறுங் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானும், தமர் அறிய மணவறைச் சேறலானும் களவாற்சுருங்கி நின்ற நாண் சிறந்தமையைப் பின்னர்த் தலைமகன் வினவ, அவள் மறுமொழி கொடாது நின்றமையைத் தலைவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே இது களவின் வழி நிகழ்ந்த கற்பாயிற்று' என்றும், 5'கரணத்தின் அமைந்து முடிந்த காலை' என்னுஞ் சூத்திரத்து ‘முகனிகுத், தொய்யென விறைஞ்சி யோளே' என்பது கரணத்தின் அமைந்து முடிந்தது என்றும் கூறினர் நச்.

6'புகுமுகம் புரிதல்' என்னுஞ் சூத்திரத்து', அகமலி யுவகைய ளாகி முகனிகுத், தொய்யென விறைஞ்சி யோளே' என்றது சிதைவு பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாட்டிற்கு உதாரணமாகக் காட்டி, இது, தலைமகன் அறிய மெய்ப்பட்டதென்பது என்றும், 7'மறை வெளிப்படுதல் தமரிற் பெறுதல்' என்னுஞ் சூத்திரத்து, ‘தமர்தர, ஓரிற்கூடி யுடன்புணர் கங்குல்' என்பது, தமரிற் பெறுதல் என்றும் உரைத்தனர் பேரா.



87. பாலை


[8வினைமுற்றி மீளுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
கன்றுவாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை
நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக்


1. அகம். க௩௬. 2. சிலப், மங்கல. ௫௦-ரு௩. 3, தொல். உரி. ௪0, 4. தொல். கற். க. 5. தொல். கற். ௫. 6. தொல். மெய்ப். க௩. 7. தொல். செய்யுள், கஅஎ. (பாடம்) 8. இடைச்சுரத்து மீளலுறும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.