பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௮௬

அகநானூறு

[பாட்டு



ரு) குடுமி நெற்றி நெடுமரச் சேவல்

தலைக்குரல் விடியல் போகி முனாஅது
கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கட் பாணி
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனக்
க0) குன்றுசேர் கவலை இசைக்கும் அத்தம்

நனிநீ டுழந்தனை மன்னே அதனால்
உவவினி வாழிய நெஞ்சே மையற
வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
சுணங்கணி வனமுலை நலம்பா ராட்டித்
௧௫) தாழிருங் கூந்தனங் காதலி

நீளமை வனப்பின் தோளுமா ரணைந்தே.

-மதுரைப் பேராலவாயார்.

(சொ - ள்.) - கஉ. வாழிய நெஞ்சே-,

க-சு. தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் - இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினை யுடைய மத்து, கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் - கன்று தன் வாயாற் சுவைத்திட முற்றத்தே தொங்கும், படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை - மர நிழலாகிய பந்தரையும் புல்லால் வேயப்பெற்ற குடில்களை யுமுடைய, நல்கூர் சீறூர் - வறுமைப்பட்ட சிறிய ஊரின் கண், எல்லித் தங்கி - இரவிற்றங்கி,

ரு-௬. குடுமி நெற்றி நெடுமரச் சேவல் - செஞ்சூடு பொருந்திய நெற்றியையுடைய நீண்ட மரத்திலுள்ள சேவலின், தலைக்குரல் விடியற் போகி - முதற் குரல் எழுந்த விடியற் காலையிற் புறப்பட்டுச்சென்று,

௬- கக. முனா அது - பழைமை யுடையதாகிய, கடுங் கண் மறவர் கல்கெழு குறும்பின் எழுந்த - வன்கண்மையுடைய மறவரது கற்கள் பொருந்திய காட்டரண்களில் எழுந்த, தண்ணுமை இடங்கண் பாணி - தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணினின்றெழும் ஒலி, அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென இசைக்கும் - அரிய சுர நெறியே செல்வோர் நெஞ்சு நடுக்குற ஒலிக்கும், குன்று சேர் கவலை அத்தம் - குன்றினைச் சார்ந்த கவர்த்த நெறிகளையுடைய காட் டில், நனி நீடு உழந்தனை மன் - நீ மிகவும் நெடிது வருந்தினை ;

கக-௬. அதனால் - ஆதலால், மை அற வைகு சுடர் விளங்கும் வான்றோய் வியன் நகர் - இருள் நீங்க விடி விளக்கு விளங்குகின்ற பெரிய மாளிகையின் கண், தாழ் இருங் கூந்தல் நம் காதலி சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி - தாழ்ந்த கரிய கூந்தலையுடைய நம் காதலியின் சுணங்கு அணிந்த அழகிய முலையின் நல்லின்பத்தைப் பாராட்டி, நீள் அமை வனப்பின் தோளும்