பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88]

களிற்றியானை நிரை

௧௮௭/187


அணைந்து - நீண்ட மூங்கில் போன்ற அழகினையுடைய தோளினையும் அணைந்து, உவ இனி - இப்பொழுது மகிழ்வாயாக.

(முடிபு) நெஞ்சே வாழிய! நீ சீறூர் எல்லித் தங்கி விடியற் போகி, அத்தம் நீடு உழந்தனை மன்னே ; அதனால் வியனகர், நம் காதலி முலை நலம் பாராட்டி, தோளும் அணைந்து இனி உவ.

(வி-ரை.) படலை - தழைப்பரப்பு. படலைப் பந்தர் - மர நிழலாகிய பந்தர். வினை முற்றி மீள்கின்றானாகலின் இப்பொழுது உவ என்றான். மை - இருள். வைகு சுடர் - விடியுமளவும் எரியும் விளக்கு ; விடி விளக்கு எனப்படும். தோளுமார் : ஆர், அசை.



88. குறிஞ்சி


[இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத் தானாகத் தோழி சொல்லியது.]



முதைச்சுவல் கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவணர்ப் பெருங்குரல் உணீஇய பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும்
புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக்
ரு) கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய

நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்
நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
சென்றனன் கொல்லோ தானே குன்றத்
திரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
க0) கவுள்மலி பிழிதரும் காமர் கடாஅம்

இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத்
திருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும்
காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்
கொடுவிரல் உளியம் கெண்டும்
கரு) வடுவாழ் புற்றின வழக்கரு நெறியே.
-

- 'ஈழத்துப் பூதன் தேவனார்.

(சொ - ள்.) க-எ. முதைச் சுவல் கலித்த - பழங் கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த, மூரிச் செந்தினை - கொழுத்த செந்தினையின், ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய - உயர்ந்த வளைந்த பெரிய கதிரை உண்ண, பகுவாய்ப் பல்லி பாங்கர் பாடு ஓர்த்து - பிளந்த வாயினையுடைய பல்லி நற்பக்கத்தே செய்த ஒலியாய நிமித்தம் உணர்ந்து, குறுகும் - அணுக வரும், புருவைப் பன்றி வருதிறம் நோக்கி - இளைமை பொருந்திய பன்றியின் வரும் வகையினை நோக்கி, கடுங்கைக் கானவன் - வலிய கையினையுடைய தினைப்புனங் காப்போன், கழுதுமிசைக் கொளீ இய - பரண்மீது கொளுத்தி


(பாடம்) 1ஏறத்துப் பூதன் தேவன்.