பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

களிற்றியானை நிரை

௧௮௯/189


உருத்தெழு குரல 1குடிஞைச் சேவல்
புல்சாய் விடரகம் புலம்ப வரைய

ரு) கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்
தூழுறு விளைநெற் றுதிரக் காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழியக்
களரி பரந்த கல்நெடு மருங்கின்

க0) விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்
மைபடு 2திண்டோள் மலிர வாட்டிப்
பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
படுபுலாக் கமழும் ஞாட்பில் துடியிகுத்
 
கரு) தருங்கலந் தெறுத்த பெரும்புகல் வலத்தர்
வில்கெழு குறும்பிற் கோள்முறை பகுக்குங்
கொல்லை யிரும்புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள் கொல்லோ தானே தேம்பெய்

உ0) தளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள்
இடுமணற் 3பந்தருள் இயலும்
நெடுமென் பணைத்தோள் மாஅ யோளே.

-மதுரைக் காஞ்சிப் புலவர்.


(சொ - ள்.) க௯- உ௨. தேம் பெய்து அளவுறு தீம்பால் - தேனைச் சொரிந்து கலந்த இனிய பாலை, அலைப்பவும் உண்ணாள் - அலைத் தூட்டவும் உண்ணாளாய், இடு மணல் பந்தருள் இயலும் - மணல் பரப்பிய பந்தருள் அங்கும் இங்கும் ஓடும், நெடுமென் பணைத் தோள் மாஅயோள் - நீண்ட மெல்லிய மூங்கில் போலும் தோளினை யுடைய மாமை நிறத்தினளாகிய உன் மகள்,

க-உ. தெறு கதிர் ஞாயிறு - யாவற்றையும் அழிக்கும் கதிர்களையுடைய ஞாயிறு, நடு நின்று காய்தலின் - முதுவேனிற் காலத்து இடை நாட்களில் நின்று எரித்தலின், உறுபெயல் வறந்த - மிக்க மழையாலாய நீர் வறண்ட, ஓடு தேர் நனந்தலை - பேய்த்தேர் ஓடும் அகன்ற இடத்தினையும்,

௩-ரு. உருத்து எழு குரல குடிஞைச் சேவல் - வெகுண்டு எழுகின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவல், புல் சாய் விடர் அகம் புலம்ப - புற்கள் ஒழிந்த வெடிப்பிடங்கள் தனித்திடச் சென்று, வரைய கல் எறி இசையின் இரட்டும் - மலையிலுள்ள கற்கள் உருண்டு விழும்போது எழும் ஓசைபோல மாறி ஒலிக்கும் (இடத்தினையும்),

௬-௯. சிறியிலை வேலத்து - சிறிய இலையினையுடைய வேல மரத்தின், ஊழ் உறு விளை நெற்று உதிர - முறையாக முற்றி விளைந்த


(பாடம்) 1. குடுமிச்சேவல். 2. திணிதோள். 3. பந்தரியலும்.