பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௯௦

அகநானூறு

[பாட்டு


நெற்று உதிர, சிள் வீடு கறங்கும் - சிள்வீ டென்னும் வண்டு ஒலிக்கும், கவ்வைப் பரப்பின் - ஆரவாரம் பொருந்திய பரப்பினையுடையதும், காழியர் வெவ்வுவர்ப்பு ஒழிய - வண்ணார்கள் எடுக்கும் வெவ்விய உவர்மண் ஒழிய, களரி பரந்த - களர் மண் பரந்ததுமாகிய, கல் நெடு மருங்கின் - கற்களை இடையே கொண்ட நீண்ட இடத்தினையும் உடையதும்,

க௦-௬. விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் - கொழுப்பினையுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள், மைபடு திண் தோள் மலிர - கருமை பொருந்திய வலிய தோள்கள் பூரிக்க, பொறை மலி கழுதை நெடுநிரை தழீஇய - பாரம்மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றி வரும், திருந்து வாள் வயவர் வாட்டி அருந்தலை துமித்த - செப்பமுடைய வாளினைக் கொண்ட வீரர்களாய வணிகர்களை வாட்டி அவர்களது அரிய தலை யைத் துணித்த, படு புலா கமழும் ஞாட்பில் - மிக்க புலவு நாறும் போர்க்களத்தே, துடி இகுத்து - துடியினைத் தாழக் கொட்டி, அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் -- அரிய அணிகலன்களைத் திறையாகப் பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பினை யுடைய வென்றியினர், வில்கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் - விற்கள் பொருந்திய அரணிடத்தே அவரவர் கொள்ள வேண்டிய முறையே பிரித்துக் கொடுப்பதுமாகிய,

கஎ-௯. கொல்லை இரும்புனம் நெடிய என்னாது - கொல்லையினையுடைய பெரிய காடுகளை நீண்ட தூரத்தன என்றெண்ணாது, மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ - மெத்தென் றிருக்கும் சிவந்த அடி வருந்தச் செல்லற்கு வன்மையுடையள் ஆவளோ .

(முடிபு) தீம்பால் அலைப்பவும் உண்ணாள் பந்தருள் இயலும் மாஅயோள், கொல்லையிரும் புனம் நெடிய வென்னாது சேவடி மெலிய ஏக வல்லுநள் கொல்லோ.

ஓடுதேர் நனந்தலையினையும் கல்லெறி யிசையின் இரட்டும் இடத்தினையும் கன்னெடு மருங்கினையு முடைய கொல்லை இரும்புனம் எனவும், கோள் முறை பகுக்கும் கொல்லை இரும்புனம் எனவும் கூட்டுக.

(வி - ரை.) நடுநின்று காய்தலின் : நடு - முதுவேனிற் காலத்தின் நடுக்கூறாகிய நாட்கள். தேர் - பேய்த் தேர், உறுபெயல் 'பரந்த' என்பது பாடமாயின், பெயல் (வறந்து) ஓடு தேராய்ப் பரவிய என்க. சிறிய இலை - சிறியிலை என விகாரப்பட்டது. வேலத்து : அத்து, சாரியை. கறங்கும் கவ்வை எனவும், வாட்டித் துணித்த எனவும் கூட்டுக. மலிர ஆட்டி எனப் பிரித்து, ஆட்டி எனற்கு அலைத்து என்றுரைத்தலுமாம். வாள் வயவர் என்றதனால் வாணிகச் சாத்தரும் வீரராயிருப்பர் என்பது பெற்றாம். அவருடன் போர் புரிந்து கொன்றார் என்பது தோன்றவே ஞாட்பில் என்றார், தேன் கலந்த பால் சுவை வீரியங்களாற் சிறக்கும் என்பது 1"பாலொடு


1. குறள். ககஉக.