பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௧௯௨

அகநானூறு

[பாட்டு


என்று யான் யாங்ஙனம் மொழிகோ - இக் களவொழுக்கத்தினின்றும் நீங்குவாயாக என்று யான் எங்ஙனம் மொழிவேன் ;

௯-க௪. நறு நுதல் அரிவை பாசிழை விலை - (இவள் தந்தைமார்) நறிய நுதலினையுடைய அரிவையாய இவளது பசிய அணிகட்கு விலையாக, அருந் திறல் கடவுள் செல்லூர்க் குணா அது - அரிய வலி கொண்ட தெய்வங்களையுடைய செல்லூரின் கீழ்பாலினதாய், பெருங் கடல் முழக்கிற்றாகி - பெரிய கடல்போலும் ஆரவாரத்தினை யுடையதாகிய, இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் - படைக் கலம் இடம்படச் செய்திட்ட வடுக்களையுடைய முகத்தினராய, கடுங் கட் கோசர் - அஞ்சாமையையுடைய கோசர்கள் (வாழும்), யாணர் நியமம் ஆயினும் - புது வருவாயையுடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும், உறும் எனக் கொள்ளுநர் அல்லர் - அமையும் எனக் கொள்வார் அல்லர்,

(முடிபு) தலைவ! கானலம் பெருந்துறை சில் செவித்தாகிய புணர்ச்சி அலரெழ இற் செறித்தமை அறியாய், பன்னாள் இவளை வருத்தி வருந்தும் நின் வயின், (இக் களவொழுக்கம்) நீங்குக என்று யாங்ஙனம் மொழிகோ ; அரிவை பாசிழை விலை கோசர் நியமமாயினும் உறுமெனக் கொள்ளுநர் அல்லர்.

(வி - ரை.) ' மூத்தோரன்ன . . . சிதைக்கும்' என்றது புணரி உருவினால் முதியோரை யொத்தும் சிறியரின் செய்கையுடைய தாயிற்றென நயம்படக் கூறியவாறு. வருமுலை, இரும்பு என்பன ஆகுபெயர். மார்பு காரணமாக வருந்துதலின் மார்பின் வருத்தா என்றாள். எம் வருத்தமறிந்து நீயே வரைதற்கு முயலுதல் முறைமை யென்பாள், யான் யாங்ஙனம் மொழிகோ என்றாள். ஆகி என்றதனை ஆகிய எனத் திரிக்க. யாணர் நியமம் எனக் கூட்டுக. தலைவன் தலை வியைப் பொன்னணிந்து வரைதல் வழக்காதலின் அரிவை பாசிழை விலை என்றான். உறுமெனக் கொள்ளுநர் அல்லர் என்றமையால், பொருள் மிகக் கொடுக்கவேண்டுமெனத் தலைவியை அருமை பாராட்டியவாறு; அன்றி, விலை நியமம் கொடுப்பினும் கொள்ளாராதலால் அவர்கள் அன்பிற்கும் உரியையாகுக என்றாள் எனலுமாம்.

(உ - றை.) 'மூத்தோர் இளையோரை வருத்தாரன்றே, அது செய்யாது புணரி இளையோர் மனை சிதைத்தாற்போல, பெரிய அறிவுடைய நீர் சிறியேமாகிய எங்களை வருத்தாநின்றீர் என்றவாறு.

(மே - ள்.) 1'நாற்றமுந் தோற்றமும்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள், 'பொருள் மிகக் கொடுத்தல் வேண்டுமென்றது' என்றனர் நச்.




1. தொல். களவு. உ௩.